புற்று நோய் வைத்திய நிபுணர் கழகத்தின் தலைவராக டாக்டர் ஹில்மி தெரிவு

புற்று நோய் வைத்திய நிபுணர் கழகத்தின் தலைவராக டாக்டர் ஹில்மி தெரிவு

இலங்கையில் புற்றுநோய் வைத்திய நிபுணர் கழகத்தின் (Sri Lanka College of Oncologists) 2021/2022ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக புற்று நோய் வைத்திய நிபுணர் ஏ.ஜே. ஹில்மி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மூதூரை பிறப்பிடமாக கொண்ட இவர் கண்டி போதனா வைத்தியசாலையின் புற்று நோய் பிரிவின் தலைமை பொறுப்பில் உள்ளார்.

மூதூர் மத்திய கல்லூரியின் பழைய மாணவரான இவர் -  இன, மத வேறுபாடின்றி சகல மக்களுக்கும் உதவி செய்து நன்மதிப்பு பெற்ற வைத்திய நிபுணர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர், மூதூரில் பிரபல்யமான வைத்தியரான மர்ஹூம். அப்துல் ஜப்பாரின் கனிஷ்ட புதல்வராவார்.

தகவல்: டாக்டர் சியாத் ஏ.ஐ.ஏ