'RTI ஆணைக்குழுவின் உறுப்பினர் வெற்றிடம் விரைவில் நிரப்பப்படும்'

'RTI ஆணைக்குழுவின் உறுப்பினர் வெற்றிடம் விரைவில் நிரப்பப்படும்'

றிப்தி அலி

தகவலறியும் உரிமைக்கான (RTI) ஆணைக்குழுவில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நிலவுகின்ற உறுப்பினர் பதவி வெற்றிடம் விரைவில் நிரப்பப்டும் என பாராளுமன்ற தெரிவித்தது.

ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேயவர்த்தன தலைமையில் ஐந்து பேரைக் கொண்ட தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு கடந்த டிசம்பர் 10ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டது.

பாராளுமன்ற பேரவையினால் சிபாரிசு செய்யப்பட்டவர்ளே ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த சிபாரிசுகள் தொடர்பில் ஆராயும் நோக்கில்  பாராளுமன்றத்திற்கு தகவல் அறியும் விண்ணப்பமொன்று சமர்ப்பிக்கப்பட்டது.

இதற்கு பாராளுமன்ற உதவி செயலாளரும். தகவல் அதிகாரியுமான டிகிரி கே. ஜயதில்லகவின் ஊடாக பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் பதில் வழங்கப்பட்டது. குறித்த பதலிலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்களை முன்மொழியுமாறு பாராளுமன்ற பேரவையினால் கோரப்பட்டிருந்த பகிரங்க விண்ணப்பத்திற்கமைய 22 பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தன.

எனினும் குறித்த 22 பேர்களின் பெயர்களையும், அவர்களை சிபாரிசு செய்த நிறுவனங்களின் பெயர்களையும் தகவல் அறியும் விண்ணப்பதில் கோரப்பட்ட போதிலும் அது வழங்கப்படவில்லை.

முன்மொழியப்பட்ட 22 பேரிலிருந்து ஐந்து பேர், 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலறியும் உரிமை சட்டத்தின் 12ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் மற்றும் தகுதிகள் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டு நியமனம் செய்வதற்காக ஜனாதிபதிக்கு சிபாரிசு செய்யப்பட்டனர்.

எனினும், கலாநிதி அதுலசரி சமரகோன், தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிற்கு உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்துள்ளார்.

இதேவேளை, ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்களின் பெயர்களை மாத்திரமே பாராளுமன்ற பேரவை சிபாரிசு செய்தே தவிர, ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு யாரையும் சிபாரிசு செய்யவில்லை.

இச்சட்டத்தின் 12.5ஆவது பிரிவிற்கமைய, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்திற்காக காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் பதவியினை உபாலி அபேயவர்த்தன இராஜினாமச் செய்தமை குறிப்பிடத்தக்கது.