பதுளை சிறைச்சாலையில் முஸ்லிம் கைதிகள் மீது கடுமையான தாக்குதல்

பதுளை சிறைச்சாலையில் முஸ்லிம் கைதிகள் மீது கடுமையான தாக்குதல்

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் கைது செய்­யப்­பட்டு பதுளை சிறைச்­சா­லையின் விசேட சிறைக்­கூ­டத்தில் தடுத்­து­வைக்­கப்­பட்­டி­ருக்கும் முஸ்லிம் சந்­தேக நபர்கள் மீது சக கைதி­களால் தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை (10) இரவு உணவைப் பெற்றுக்கொள்­வ­தற்­காக வரி­சையில் நின்­ற­வர்கள் மீதே இவ்­வாறு தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது. இதில் காய­ம­டைந்த நால்வர் பதுளை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டனர்.

இவர்­களில் மூவர் சிகிச்சை பெற்று திரும்­பி­யுள்­ள­தா­கவும் பலத்த காயங்­க­ளுக்­குள்­ளான ஒருவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்­று­வ­ரு­வ­தா­கவும் அறிய முடி­கி­றது.

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் கைது செய்­யப்­பட்ட சுமார் 9 பேர் இச்சிறைச்­சா­லையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் இச்சம்­ப­வத்தைத் தொடர்ந்து அங்கு தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்கும் முஸ்லிம் சந்­தேக நபர்­க­ளுக்கு உயி­ரச்­சு­றுத்தல் உள்­ள­தா­கவும் உட­ன­டி­யாக இவர்­களை வேறு பாது­காப்­பான சிறைச்­சா­லைக்கு மாற்­று­மாறும் அவர்­க­ளது குடும்­பத்­தி­னரால் மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ். உறுப்­பி­னர்கள் எனக் கூறியே இவர்கள் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது. தடிகள் மூலம் நடத்­தப்­பட்ட தாக்­கு­தலால் ஒரு­வரின் தாடை எலும்­புகள் மற்றும் பல் என்­பன சேத­ம­டைந்­துள்­ள­தா­கவும் மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு­வுக்கு முன்­வைக்­கப்­பட்­டுள்ள முறைப்­பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் பதுளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.