தேசமே காணொளி பாடல் வெளியீடு

தேசமே காணொளி பாடல் வெளியீடு

நடிகரும் இயக்குநரும் ஊடகவியலாளருமான ஜூனைட் றிஸ்வானின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தேசமே' காணொளி பாடல், எதிர்வரும் சுதந்திர தினத்தன்று வெளியிடப்படவுள்ளது.

இந்தக் காணொளி பாடலுக்கான இசையமைப்பை கே.சிவகரன்,  வழங்கியுள்ளார். என்.லுக்மானுள் ஹக்கீம் பாடலை பாடியுள்ளார். பாடலுக்கான வரிகளை எஸ்.எ.சி.மரிக்கார் எழுதியுள்ளார்.

எஸ்.நிதர்சன் படத்தொகுப்பை செய்துள்ளதுடன் டிலான், உமைர் நவ்ஸாட், பிரகாஷ் குமார் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். எஸ்.செந்தூரன் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.