கச்சத்தீவு விவகாரம்: 'ஸ்டாலினின் கருத்து இந்திய அரசின் கருத்தல்ல'

கச்சத்தீவு விவகாரம்: 'ஸ்டாலினின் கருத்து இந்திய அரசின் கருத்தல்ல'

அண்மையில் இந்திய பிரதமர் மோடி கலந்துகொண்ட நிகழ்வொன்றில் கச்சத்தீவை இந்தியா மீண்டும் பெற வேண்டும் என உரையாற்றிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனது தனிப்பட்ட கருத்தையே முன்வைத்ததாக தெரிவித்த ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன, தமிழக முதல்வரின் கருத்தை இந்திய அரசின் கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (31) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

"எந்தவொரு நாட்டிலும் அந்தந்த பிரதேசங்களுக்கு பொறுப்பான தலைவர்கள் பல்வேறு அரசியல் கருத்துக்களை கொண்டிருப்பர். எமது நாட்டில் வடக்கில் முன்னாள் முதலமைச்சராக சி.வி.விக்கினேஸ்வரன் பதவி வகித்த போது, பல்வேறு கருத்துகளை உலக நாடுகளிடம் முன்வைத்தார்.

அவரது அந்த கருத்துகள் அந்த நாட்டு அரசின் கருத்தாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது தனது நிலைப்பாடு என்றார். எனவே கச்சத்தீ தொடர்பில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்த போது, இந்தியப் பிரதமர் மோடி எவ்வித கருத்தையும் முன்வைக்கவில்லை" என்றார்.