மயோன் முஸ்தபா பயணித்த கார் விபத்தில் சிக்கியது

மயோன் முஸ்தபா பயணித்த கார் விபத்தில் சிக்கியது

முன்னாள் உயர் கல்வி பிரதியமைச்சர்  மயோன் முஸ்தபா பயணித்த கார் இன்று (27) திங்கட்கிழமை காலை மட்டக்களப்பு அரசடி பிரதேசத்தில் மதிலில் மோதி விபத்துக்குள்ளாகியது.

இதன்போது, காரில் பயணித்த முன்னாள் பிரதியமைச்சர் மற்றும் அவரது புதல்வி ஆகிய இருவருக்கும் எந்தவித பாதிப்புமில்லை என தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

–நூருள் ஹுதா உமர்–