'நோன்பு நோற்றாலானது உடலுள ஆரோக்கியமிகு செயலாகும்'

'நோன்பு நோற்றாலானது உடலுள ஆரோக்கியமிகு செயலாகும்'

Dr Muhammad Abdullah Jazeem
MBBS, MRCGP
Fellowship in Diabetes
Specialist Family Medicine

தற்சமயம் பல கோடி கணக்கான முஸ்லிம்கள் அதிகாலை தொடக்கம் மாலை வரை ரமழான் நோன்பை நோற்றவாறு உள்ளனர். இவ்வகையான நோன்பானது பல வழிகளில் எமக்கு நன்மை பயக்க வல்லது. அவையாவன:

1. உடல் தொழிற்பாடு சம்மந்தப்பட்ட நன்மைகள்
2. உள தொழிற்பாடு சம்மந்தப்பட்ட நன்மைகள்
3. ஆண்மீகம் சம்மந்தப்பட்ட நன்மைகள்

எமது உடற் கலங்களானது புரதம், மாப்பொருள் (carbohydrates), கொழுப்பு (Lipids ) மற்றும் நீர் கொண்டு உருவாக்கப்பட்டது. எமது உடலிற்கு தேவையான  முதற்தர சக்தி குளுக்கோஸ் (கார்போஹைட்ரெட்ஸ்) மூலமாக சாதாரன நிலைமயில் உடலிற்குக் கிடைக்கப் பெறுகிறது.

எனினும் நோன்பின் பிற்பகுதியில் கொழுப்பின் மூலம் உருவாகும்  கீடோன் அலகுகளால் (ketone bodies) மூளைக்கு தேவையான சக்தி மாற்றீடாக உருவாக்கப்பட்டு ஈடுசெய்யப்படுகிறது.

இவ்வாறு உடலில் குளுகோஸ் அளவு குறையும் போது கீடோன் அலகுகளால் வழங்கும் சக்தியானது உடலுக்கு அனுசேப தாக்க அழுத்தங்களை ஈடு செய்யும் திறனை கற்றுக்கொடுக்கிறது. இதனால், மூளையின் செயற்திறன் பன்மடங்கு அதிகரிக்கின்றது (develop a new metabolic pathway).

ஒரு ஆராய்ச்சியில் கிடைக்கும் சான்றின் மூலம் எமக்கு அறியக்கிடைப்பது நோன்பானது பக்கவாதம், மேலும் வயோதிப காலங்களில் ஏற்படும் மறதி (Parkinson’s disease, Alzheimer’s disease), மூளை, முண்ணானில் ஏற்றபடும் அழுத்தங்களையும் (stress related trauma) குறைப்பதாகக் கூறுகிறது.

நோன்பும் - ஞாபகசக்தியும்  மற்றும் விவேகமும்

நோன்பு நோற்றப்பதனால் ஏற்றப்படும் உடல் அனுசேப சக்தி சுழற்சி (intermittent metabolic switching mechanism) முறைமையானது ஞாபகசக்தியையும் சிந்தனாசத்தியையும் வெகுவாக அதிகரிப்பதாக ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் காணக்கிடைக்கிறது. எனவே உங்கள் குழந்தைகளுக்கு நோன்பு நோற்கக் கற்றுக்கொடுங்கள்.

-Nature Neuroscience-

இன்னொரு ஆராய்ச்சியின் படி நோன்பின் மூலம் ஏற்படும்  உடல் நிறை குறைவானது நீரிழிவு தொடக்க நிலையில் ஏற்படும் இன்சுலின் குறைவை நிவர்த்தி செய்யும் ஒரு அரு மருந்தாகப் பார்க்கப்படுகிறது.

பிறிதொரு  ஆய்வின் படி உடலுக்கு தேவையான கலோரி அளவை 825 கலோரியாக நாளொன்றுக்கு மட்டுப்படுத்தப்படும்  போது ஏற்படும் கணிசமான உடல் நிறைக் குறைவு மூலம் தொடக்க நிலை நீரிழிவு நோய், குருதி அழுத்தம் என்பனவற்றை மருந்துகள் மூலம் குணப்படுத்துவதை விடவும் மிக ஆரோக்யமாக குணப்படுத்தலாம் என அறியக்கிடைக்கின்றது.

‘Primary Care-led weight management’

உடல் நிறைக் குறைப்பு மற்றும் ஒழுங்கான உடற் பயிற்சி என்பன ஆரோக்கியமான வாழ்விற்கு இன்றியமையாதவையாகும்.இவற்றின் மூலம் இன்சுலின் சுரப்பு உடற் கலங்களுக்குள் செல்ல ஏற்படும் தடை கணிசமான அளவு குறைக்கப்படுகிறது.

உடல் நிறையும், இடுப்பு சுற்று பருமனும்  அதிகரிப்பதானது இதயம் சம்மந்தப்பட்ட நோய்களுக்கான ஆரம்பப் படித்தரமாகும். இவ்வாறு உடற் பருமன் கூடும் போது குருதி அழுத்தம்,கொலெஸ்டெரோல் (triglycerides) படிவு அதிகமாவதுடன் நீரிழிவு நோயின் ஆரம்ப கட்டமும்  எட்டப்படுகின்றது.

இடுப்பு சுற்றானது ஆண்களுக்கு 40 inches விட அதிகமாகவும் பெண்களுக்கு 35 inches ஐ விடவும் அதிகரிக்கும்போது  உடற் கட்டமைப்பில் மாற்றம் உள்ளும் புறமுமாக ஏற்படுகிறது. இதனை பின் வரும் படம் விளக்குகிறது.இவ்வுடல் செயற்பாடை metabolic syndrome என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.

நோன்பானது அதனை உரிய முறையில் நோற்றக்கப்படும் போது உடல் நிறை குறைக்க உதவுகின்றது. மற்றும் முறையான இதயத்துடிப்பு வேகத்தையும், சுவாசத்தையும் உரிய அளவிற்கு மட்டுப்படுத்துகிறது. மேலும் குருதி அழுத்தத்தை சீராக்குகிறது. இறுதியாக சமிபாட்டு தொகுதியின் வினைத் திறனை அதிகரிக்கிறது.

'நோன்பு நோற்றப்பதனால் பொதுவாக இதயம் ஆரோக்கியம் பெறுகிறது'

சமிபாட்டுத் தொகுதியில் ஏற்ப்படும் வினைத்திறன்கள்

எமது சமிபாட்டுத் தொகுதி கணிசமான நன்மை பயக்கும் நுண்ணுயிர்களைக் கொண்டுள்ளது. இவை பொதுவாக பாக்டீரியாக்களின் தொகுதியாகும். இவை உணவு ஜீரணித்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. நோன்பின் போது சமிபாட்டுத் தொகுதியானது ஓய்வில் இருப்பதனால் இந்நுண்ணுயிர்களின் பெருக்கம் வினைத்திறன் என்பன அதிகரிப்பதால் சமிபாட்டுத் தொகுதி திறன்பட செயற்படுகிறது.

மன அழுத்தம் குறைவதால் சந்தோசம் அதிகரிக்கின்றது

இன்னொரு அறிக்கையின்படி உடற்ப்பயிற்சி , நோன்பு நோற்றல் என்பன மன அழுத்தத்தைக்  குறைத்து சந்தோசத்தை அதிகரிப்பதாகக் காணக்கிடைக்கிறது. நோன்பில் பசித்திருக்கும்  போது உடல் ஹோர்மோன் செயற்றப்பாடுகளில் (hormonal regulation)சீராக்கம் ஏற்படுகிறது.

உடல் நிர்ப்பீடனமும் நோன்பும்  

நோன்பு நோற்றப்பதனால் உடலின் நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதாக ஒரு ஆய்வில் கிடைக்கின்றது. இதனால் தற்போதுள்ள கொரோனா வைரஸ்களில் இருந்து ஒரு பாதுகாப்புப் படையாக, இநோன்பை நான் கருதுகின்றேன்.

நோன்பும் புற்று நோயும்

நோன்பு நோற்றபபதால் ஏற்படும் பசித்தன்மை புற்று நோயெதிர்ப்பை உண்டாக்கவல்லது மேலும் புற்று நோய்க்கெதிராகப் பயன்படுத்தும் இரசாயன மருந்துகளின் (chemotherapy) தொழிற்ப்பாட்டை அதிகரிப்பதாக எலிகளைக் கொண்டு செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் கூறுகின்றன. மேலும் நோன்பானது மரபணு (DNA) விகாரம் அடைவதைத் தடுப்பதாகவும் அந்த ஆராய்ச்சி மேலும் சான்றுபகர்கிறது.

நாம் எவ்வாறு இநோன்பை பயனுள்ளதாக மாற்றுவது?

நோன்பு திறந்ததிலிருந்து அதிகாலை ஸஹர் உணவு உண்ணும் வரை ஆரோக்கியமான உணவுகளை மிதமாக உண்பதன் மூலமும் சிறிதளவேனும் உடற்பயிற்சியில் நம்மை ஈடுபடுத்துவதன் மூலமும் இநோன்பை பயனுள்ளதாக மாற்றலாம்.

நோயாளிகள் தொடர்ச்சியான மருந்து உபயோகிப்பவராயின் (நீரிழிவு நோய், குருதி அழுத்தம், சொலெஸ்டெரெரோல், இதய நோய், சிறு நீராக நோய்) தக்க முறையில் வைத்திய ஆலோசனை பெற்று நோன்பு நோற்பதே உசிதம்.

நோன்பு திறந்ததில் இருந்து அதிகமாக நீராகாரமும் நீரும் அருந்துதல் நோன்பின்போது இழக்கும் உடல் நீரை நிவர்த்தி செய்ய உதவும்.

அதிகாலை ஸஹர் உணவானது மிகமுக்கியமாதலால் அதை ஸஹர் நேரத்தின் இறுதியில் அருந்துங்கள். மேலும் இவ்வுணவில் புரதம், கொழுப்பு என்பவற்றை சேர்ப்பதானது நோன்பிருக்கும் போது ஏற்படும் உடற்சோர்வை குறைக்கவல்லது.

ரமழான் சம்மந்தப்பட்ட உடல் அசதிகளிலிருந்து எவ்வாறு விடுபடுவது

தலையிடி -ரமழான் முதல் வாரங்களில் ஏற்படும் தலையிடியானது தலையின் முற் பகுதியில் தொடங்கி தலையைச் சுற்றி பட்டிபோன்று இருக்கும். மேலும் நேரம் செல்ல செல்ல அதிகரிக்கும். இது  ஆங்கிலத்தில் tension headache எனப்படுகிறது.

நாம் எவ்வாறு இவ்வகையான தலையிடியில் இருந்து தவிர்ந்து கொள்ளலாம்?

1. ஸஹர் உணவை இயலுமானவரை      பிற்றப்படுத்தி உண்ணுங்கள்
2. நீர் மற்றும் நீர் ஆகாரங்களை அதிகளவில் இரவு நேரங்களில் அருந்துங்களை
3. ஒழுங்கான உறக்கம்
4. உரிய உடற்பயிற்சி (நடை , சைக்கிள் சவாரி , நீந்துதல் , தொங்கோட்டம் )

மேலும் தவிர்க்க வேண்டியவை

1.அதிகமாக கோப்பி அருந்துதல் , மது அருந்துதல்
2.அதிகமான சத்தம் , குளிர் வெளிச்சம்
3.குறைந்த வெளிச்சத்தில் வாசித்தல்
4.மொபைல் போன் பார்வை நேரங்களை  குறைக்க வேண்டும். ( screen time)

ரமழான் நோன்பின் போது எவ்வாறு வாய்ச் சுகாதாரத்தை பேணுவது?

1.நாளொன்றுக்கு இருமுறையாவது பல் துலக்குங்கள் ( ஸஹர் உணவின் பின்னும் , இப்தார் உணவின் பின்னும் fluoride கொண்ட பற்பசை கொண்டு பல் துலக்கவும் )

2.உங்களது நாக்கையும்  நன்றாக சுத்தம் செயுங்கள் (tongue scraper உபோயோகிப்பது நல்லது )
3.பற்களின் ஈறுகளையும் நன்றாக சுத்தம் செயுங்கள் (flossing)
4.நோன்பில்லாத நேரத்தில் அதிகமாக நீர் அருந்துங்கள்.
5.உங்களுக்கு பல் சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் இருந்தால் பல் வைத்தியரை நாடுங்கள்.

மேலும் தவிர்க்க வேண்டியவை

1.புகை பிடித்தல் , வெற்றிலை பாக்கு போடுவது ,
2.எண்ணெய் மற்றும் கார உணவுகளை அதிகமாக உண்பது என்பனவாகும்  ( ஸஹர் உணவின் பொது முக்கியமாக தவிர்த்துக்கொள்ளுங்கள்).

ரமழான் பகல் நேரங்களில் ஏற்படும் நெஞ்செரிவை எவ்வாறு தவிர்ப்பது?

ஸஹர் உணவில்  எண்ணெய் மற்றும் கார உணவுகளை  உண்பதை  முக்கியமாக தவிர்த்துக்கொள்ளுங்கள். மேலும் தயிர் அல்லது yoghurt உண்பதன் மூலமும், நன்றாக நீர் அருந்துவதனாலும், பழங்கள் உண்பதாலும்  நென்செரிவைத் தவிர்க்கலாம்.

எனினும் உணவு அஜீரணம் (Gastrtis , dyspepsia ) தொடர்ச்சியாக இருப்பின் வைத்திய ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்களது உடல் நிறையை உயரத்திற்கு ஏற்றால் போல் மட்டுப்படுத்துவதன்   மூலம் பெரும்பாலான நோய்களிலிருந்து பாதுகாப்பு பெறலாம்.

இதற்கு இந்த நோன்பு  காலத்தை பயன்படுத்தி உங்கள் உடல் நிறையக் குறைப்பதனூடாக நோன்பினது உடல் ஆரோக்கியம்  சம்பந்தப்பட்ட நன்மைகளையும் நாம் பெறலாம்.

ரமழானும் மீரிழிவு நோயும்

நீரிழிவு நோயாளிகள் நோன்பை நோற்பதற்கு தங்களை தயார் படுத்துவதற்கு வைத்திய ஆலோசனை பெற்று கொள்ளுங்கள். இதற்காக ரமழான் அல்லாத மாதங்களில் முற்கூட்டியே நோன்பு வைத்து அதன் போது ஏற்படும் உடல் தொழிற்பாடு, குருதியில் சீனியின் அளவில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப தங்களது மாத்திரைகளையும், இன்சுலின் அளவையும் சரிசெய்து கொள்ளவேண்டும்.

இதற்காக 2 அல்லது 3 மாதங்கள் ரமழானுக்கு முன்னரே 3 நாட்கள் தொடர் நோன்பு வைத்து குருதியிலுள்ள சீனியின் அளவை சீரான இடைவெளியில் வைத்திய ஆலோசனைப்படி அவதானித்து  இதன் மூலம் ரமழான் மாதத்தில் எவ்வாறு மாத்திரைகளை எடுக்க வேண்டும் என்று தீர்மானித்துக்கொள்ளலாம்.

ரமழான் மாதத்தில் நோன்பு நோற்க்கும் போது பெரும்பாலும் பின்னேரங்களில் உடலில் சீனியின் அளவு குறைவதால் பின்வரும் அறிகுறிகள் தென்படும்.

தலைவலி
நெற்றி, உடல் வியர்த்தல்
நடுக்கம்
பசி
தலைசுற்று
பலவீனம்
மயக்கம்

இவ்வாறான அறிகுறிகளில் ஒன்றோ அல்லது பலதோ தென்படும்போது நீங்கள் உடனடியாக சீனி சேர்க்கப்பட்ட குடி பான த்தை அல்லது சீனி நிறைந்த உணவை (chocolate or  tofee) எடுக்க வேண்டும்.

மேலும், குருதியில் சீனியின் அளவு 70gm /dl அல்லது அண்ணளவாக 4 mmol /l ஐ விடகுக்கறையும் போது நோன்பை விடுவதே நன்மையானது என DAR (Diabetes & Ramadan - International diabetes federation) அமையம் பரிந்துரை செய்துள்ளது. ஏனெனில் இது (hypoglycemia) மனிதனை கொல்லக் கூடியது.

மேலும் ரமழான் நோன்பின் போது குருதியில் சீனியின் அளவு கூடும் போதும் கூட பாரதூரமான விளைவுகள் ஏற்றபட வாய்ப்புண்டு. மேலும் மயக்கம் ஏற்பட்டு அது மரணத்தைக் கூட ஏற்றப்படுத்தலாம். எனவே உடலில் சீனியின் அளவை சீரே பேண உங்களது வைத்திய ஆலோசனையை பெற்றுக் கொள்ளுங்கள்.

ரமழானும் நீரிழிவு நோயும் என்ற தலைப்பு இக்கட்டுரையின் நோக்கத்திற்கு அப்பாற்பட்டதாகையால் மேலே சொல்லப்பட்ட சிறு குறிப்புடன் இக்கட்டுரையை முற்றுவிக்கிறேன்.