குருநாகல் போதானா வைத்தியசாலையின் பணிப்பாளர் இடமாற்றம்

குருநாகல் போதானா வைத்தியசாலையின் பணிப்பாளர் இடமாற்றம்

குருநாகல் போதானா வைத்தியசாலையின் பணிப்பாளரான டாக்டர் சரத் வீரபண்டார, மே 6ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றப்பட்டுள்ளார்.

இந்த இடமாற்றம் சுகாதார அமைச்சின் செயலாளர் பத்ரானி ஜயவர்தனவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது தேர்தல் பிரகடணப்படுத்தப்பட்டுள்ளமையினால் பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் விசேட அனுமதி பெற்று இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவருக்கு எதிராக சுகாதார அமைச்சினால் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதும் முக்கிய விடயமாகும். இதேவேளை, அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் வைத்தியசாலையின் ஊழியர்கள் ஆகியோரின் எதிர்ப்பினை அடுத்து இவர் இடமாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த இடமாற்றத்தினை அடுத்து  வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளரான டாக்டர் சந்தன கென்டகமுவ பதில் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். குருநாகல் போதானா வைத்தியசாலையின் முன்னாள் வைத்தியரான ஷாபி சிஹாப்தீனுக்கு எதிராக கடந்த வருடம் முன்னெடுக்கப்பட்ட போலிக் குற்றச்சாட்டினை இவர் முன்னின்று வழி நடத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.