நிகாப் அணிந்து சென்ற முஸ்லிம் பெண்கள் விசாரணைகளின் பின்னர் விடுதலை

நிகாப் அணிந்து சென்ற முஸ்லிம் பெண்கள் விசாரணைகளின் பின்னர் விடுதலை

கொழும்பு, காலி முகத்திடலிற்கு நிகாப் அணிந்து கொண்டு சென்ற நான்கு முஸ்லிம் பெண்கள், கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அவசர காலச் சட்டத்தின் கீழ் நிகாப் அணிவதற்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும் கடந்த ஓகஸ்ட் 23ஆம் திகதியுடன் அவசர காலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முன்னணி வர்த்தக குடும்பமொன்றினைச் சேர்ந்த நான்கு முஸ்லிம் பெண்கள், முகத்திரையான நிகாப் அணிந்துகொண்டு காலி முகத்திடலிற்கு சென்றுள்ளனர்.

இவர்கள் விமானப் படையினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதன்போது மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் தலையீட்டினை அடுத்து பெண் பொலிஸாரினால் குறித்த பெண்கள் சோதனை மேற்கொள்ளப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.