ஜனநாயகத்துக்கான போராட்டம் தொடரும்: ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன்

ஜனநாயகத்துக்கான போராட்டம் தொடரும்: ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன்

ஜன­நாயகத்­துக்­கான தங்கள் போராட்டம் தொடரும் என ஜனா­தி­பதி சட்­டத்த­ரணி எம்.ஏ. சுமந்­திரன் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தை கலைத்த வர்த்­த­மானி, பொதுத் தேர்தல் திகதியை சவா­லுக்கு உட்­ப­டுத்தும் மனுக்கள் விசா­ர­ணைக்கு எடுக்கப்­ப­டாது தள்­ளு­படி செய்­யப் நிலையில் அந்த மனுக்கள் தொடர்பில் பிர­தான வாதங்­களை முன்­வைத்த ஜனாதி­பதி சட்­டத்­தரணி என்ற ரீதியில், தீர்ப்பின் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

"மனுக்கள் தொடர்பில் முன்­வைக்­கப்­பட்ட அடிப்­படை ஆட்­சே­பங்­களை நிரா­க­ரிக்­கவும், மனுக்­களை விசாரணைக்கு ஏற்­காது தள்­ளுபடி செய்­யவும் உயர் நீதிமன்றம் தீர்­மா­னித்­துள்­ளது. தள்­ளுபடி செய்­யப்­ப­டுவ­தற்­கான கார­ணங்கள் உள்­ளிட்­டவை தெரியவில்லை. விபரமான தீர்ப்பு கிடைத்த பின்­ன­ரேயே கார­ணங்கள் தொடர்பில் ஆராயலாம்.

எது எப்­ப­டியோ நீதிமன்றம் வழங்­கிய இந்த தீர்ப்பை நாம் ஏற்கின்றோம். ஜனநாயகத்துக்கான எங்கள் போராட்டம் தொடரும்" என அவர் தெரிவித்தார்.