பெப்ரல் அமைப்பிற்கு நோர்வே தூதுரகம் உதவி

பெப்ரல் அமைப்பிற்கு நோர்வே தூதுரகம் உதவி

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் நாட்டில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான கண்காணிப்பு நடவடிக்கையின் போது சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பெப்ரல் அமைப்பிற்கு நோர்வே தூதுரகம் உதவி வழங்கியுள்ளது.

இது தொடர்பில் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரலிற்கும் கொழும்பிலுள்ள நோர்வே தூதுவராலயத்திற்கும் இடையிலான ஒப்பந்தமொன்று இன்று (22) திங்கட்கிழமை கைச்சாத்திடப்பட்டது.

பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி மற்றும் கொழும்பிலுள்ள நோர்வே தூதுவராலயத்தின் பொறுப்பதிகாரி Monica Svenskerud  ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

தேர்தல் மற்றும் தேர்தல் கண்காணிப்பு பணிகள் ஆகியவற்றில் பெண்களின் பங்குபற்றலை அதிகரிக்கவும் இந்த உதவி பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.