இரண்டரை மாதங்களுக்கு பின்னர் மீண்டும் திறக்கப்பட்ட வெலிசர கடற்படை முகாம்

நாட்டில் அதிகளவு கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்ட வெலிசர கடற்படை முகாம் இரண்டரை மாதங்களுக்கு பின்னர் நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. வெலிசர கடற்படை முகாமின் கண்காணிப்பு பணிகள் பல கட்டங்களின் கீழ் நேற்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக கடற்படை ஊடக பேச்சாரள் லெப்டினன் கமான்டர் இசுரு சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.

“கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி கடற்படையின் முதலாவது கொரோனா தொற்றாளர் பொலன்னறுவையில் இனம் காணப்பட்டதை அடுத்து எப்ரல் 24ஆம் திகதியில் இருந்து இதுவைர வெலிசர முகாமின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட முகாமாக வெலிசர கடற்படை முகாம் மாற்றப்பட்டது.

தற்போது குணமடைந்து வரும் கடற்படை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தனிமைப்படுத்தப்பட்டிருந்த இம்முகாம் அதன் நடவடிக்கைகளை வழமை போல் முன்னெடுத்துச்செல்ல முடியுமென சுகாதார தரப்பினால் பரிந்துரை வழங்கப்பட்டது.

இதற்கு அமைய கடற்படை தளபதியினால் இம் முகாம் பணிகளை முன்னெடுத்து செல்வது குறித்து ஆலாசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு அமைய  பல கட்டங்களின் கீழ் இம் முகாமின் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அடுத்து வரும் ஒரு சில தினங்களுக்குள் இம் முகாமின் பணிகளை முழுமையாக முன்னெடுத்துச்செல்ல எதிர்பார்த்துள்ளளோம் எனத் தெரிவித்தார்.