இத்தாலியிலுள்ள இலங்கைத் தொழிலாளர்களுக்கு வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் உதவி

 இத்தாலியிலுள்ள இலங்கைத் தொழிலாளர்களுக்கு  வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் உதவி

"சண்டடோரியா 2020" திட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 01ஆம் திகதி முதல் எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் திகதி வரையான காலப் பகுதிக்கு இத்தாலிய அதிகாரிகள் வழங்கியுள்ள பொது மன்னிப்பின் மூலமாக பயன்களை அடைந்துகொள்வதற்காக இத்தாலியிலுள்ள இலங்கைத் தொழிலாளர்களுக்கு உதவும் முகமாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொவிட்-19 சூழலில் இலங்கைத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு, இலங்கையின் கடவுச்சீட்டுக்காக விண்ணப்பிக்கும் தொழிலாளர்களிடமிருந்து போதிய ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் அறவிடப்படும் அபராதக் கட்டணத்தை தள்ளுபடி செய்து, கட்டணங்களை 140 யூரோவாக (330 யூரோ மற்றும் 420 யூரோவிலிருந்து) குறைப்பதற்கு அமைச்சர் குணவர்தன நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளார்.

இந்த முயற்சியானது, தற்போது இத்தாலியில் தங்கியுள்ள 20,000 இலங்கைத் தொழிலாளர்களுக்கு பயனளிப்பதாக அமைவதுடன், அவர்கள் இலங்கையின் கடவுச்சீட்டுக்களைப் பெற்றதன் பின்னர் இத்தாலியில் பணிபுரிவதற்கான வீசாக்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.