பிரதேச சபை தவிசாளர் பதவியிலிருந்து நௌசாத் இராஜினாமா

பிரதேச சபை தவிசாளர் பதவியிலிருந்து நௌசாத் இராஜினாமா

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்டுப்பாட்டிலுள்ள சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் பதவியிலிருந்து ஏ.எம். நௌசாத், நேற்று (04) செவ்வாய்க்கிழமை இராஜினாமா செய்துள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்மாந்துறை பிரதேச சபை தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஊடாக பிரதேச சபை உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டு தவிசாளராக நியமிக்கப்பட்டார்.

எனினும் இந்த பாராளுமன்ற தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தினை வெற்றி பெற வேண்டும் எனக் கோரி அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு எதிராக பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறையில் இடம்பெற்ற கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸினை நௌசாத் ஏமாற்றி விட்டதாக அக்கட்சியின் தலைவரான றிசாத் பதியுதீன் குற்றஞ்சாட்டினார்.

இதனையடுத்தே சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் பதவியிலிருந்து ஏ.எம். நௌசாத் இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.