பல்கலைக்கழகமாக மாற்றப்படுகின்றது கம்பஹா விக்ரமாராச்சி ஆயுர்வேத நிறுவகம்

பல்கலைக்கழகமாக மாற்றப்படுகின்றது கம்பஹா விக்ரமாராச்சி ஆயுர்வேத நிறுவகம்

கம்பஹா விக்ரமாராச்சி ஆயுர்வேத நிறுவகம், எதிர்வரும் 2021ஆம் ஆண்டு மார்ச் 01ஆம் திகதி முதல் பல்கலைக்கழகமாக மாற்றப்படவுள்ளது.

இதற்கமைய, இலங்கை கம்பஹா விக்ரமாராச்சி சுதேச மருத்துவப் பல்கலைக்கழகம் என குறித்த நிறுவனம் அழைக்ப்படவுள்ளது.

இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் கல்வி அமைச்சரான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸினால் கடந்த ஓக்டோபர் 27ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பல்கலைக்கழகம் சுதேச மருத்துவப் பீடம், சுதேச சுகாதார விஞ்ஞானங்கள் மற்றும் தொழிநுட்பவியற் பீடம், சுதேச சமூக விஞ்ஞானங்கள் மற்றும் முகாமைத்துவ கற்கைகள் பீடம் மற்றும் பட்டதாரி கற்கைகள் பீடம் ஆகிய நான்கு பீடங்களையும் உள்ளிடக்கியுள்ளது. 

கம்பஹா விக்ரமாராச்சி ஆயுர்வேத நிறுவகம் இதுவரை காலமும் களனி பல்கலைக்கழகத்தின் கீழ் செயற்பட்ட நிலையிலேயே தனியான பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.