மார்பக புற்றுநோயிலிருந்து குணமடைந்தோரை வலுவூட்ட நடவடிக்கை

மார்பக புற்றுநோயிலிருந்து குணமடைந்தோரை வலுவூட்ட நடவடிக்கை

மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு மாதத்தின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில், இலங்கையில் மார்பக மெத்தைகளை வழங்குவதை மீண்டும் தொடங்குவதற்காக ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் தீர்மானித்துள்ளது.

இந்த நடவடிக்கை Zonta club II ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கு தேவையான ஆதரவினை ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் வழங்கியுள்ளது.

இந்த உதவியை ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ரிட்சு நக்கென், Zonta club II இன் தலைவர் மேனகா கல்கமுவவிடம் கையளித்தார்.

இந்த நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான உதவிப் பிரதிநிதி மதுஷா திஸ்ஸாநாயக்க, பாலியல் நோய்களுக்கான சிறப்பு வைத்திய நிபுணர் டாக்டர் சுஜாதா சமரகோன் மற்றும் Zonta club II இன் பணிப்பாளர் ஷியாமா பெரேரா ஆகியோர் கலந்துகொண்டனர்.

மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை, கழுத்துப் புற்றுநோய் ஆகியவை இலங்கையில் பெண்களிடையே உள்ள மிகவும் பொதுவான புற்றுநோயாகும். மார்பக அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து, பெண்கள் வலி காரணமாக கையை நகர்த்த தயங்குவதுடன் அறுவை சிகிச்சை செய்த இடம் காயத்திற்கு ஆளாக நேரிடும் என்று பயப்படுகிறார்கள்.

இதன் விளைவாக வலி நிவாரணமாகவும், பெண்களுக்கு உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான ஆறுதலை வழங்குவதற்காகவும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு அணிய ஒரு மெத்தை (Cushion) உருவாக்கப்பட்டது.

அறுவை சிகிச்சைக்கு பின்னர் கையின் இயல்பான இயக்கம், நிணநீர் முடிச்சுக்கள் வீங்கலை (Lymphoedema) குறைக்க உதவுகிறது.  மார்பு மற்றும் அக்குளில் உள்ள நிணநீர் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து கையில் உண்டாகும் வீக்கம்  அறுவை சிகிச்சையின் பின்னர் ஏற்படும் ஒரு சிக்கலாகும்.