'ரமழானை நம்பிக்கையுடன் வரவேற்போம்' எனும் தொனிப்பொருளில் விஷேட கருத்தரங்கு

'ரமழானை நம்பிக்கையுடன் வரவேற்போம்' எனும் தொனிப்பொருளில் விஷேட கருத்தரங்கு

'புனித ரமழானை நம்பிக்கையுடன் வரவேற்போம்'எனும் தொனிப்பொருளில் விஷேட கருத்தரங்கொன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (30) மாலை 07 மணி முதல் 8.30 வரை தெஹிவளை பத்ஹ் கல்வி எகடமியில் இடம்பெறவுள்ளது.

இதில் 'ரமழானை வரவேற்கத் தயாராகிக் கொள்வோம்' எனும் தலைப்பில் முப்தி யூஸுப் ஹனீபாவும், 'நோன்பு பற்றி சமகால சட்டங்கள்'எனும் தலைப்பில் ஹாரிஸ் அல்-ரஷாதியும் கலந்துரையாடவுள்ளனர்.

இக்கலந்துரையாடலில் ஆலிம்கள், மஸ்ஜித் இமாம்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கலந்து, நோன்பு பற்றிய மார்க்கத் தெளிவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த நிகழ்விற்கு முற்பதிவு அவசியம் என்பதானால் உங்கள் பெயரையும், தொலைபேசி இலக்கத்தையும் 094770510051 என்ற இலக்கத்கிற்கு அல்லது ikhlas@zamzamlk.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி பதிவு செய்துகொள்ளவும்.

பத்ஹ் எகடமி, மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமை சமகால மார்கத் தெளிவு பற்றிய தொடர் கலந்துரையாடலை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.