கொரோனாவை காரணம் காட்டி வசந்தம் ரி.வி, வானொலியில் பணியாற்றும் முஸ்லிம்களுக்கு கட்டாய விடுமுறை

கொரோனாவை காரணம் காட்டி வசந்தம் ரி.வி, வானொலியில் பணியாற்றும் முஸ்லிம்களுக்கு கட்டாய விடுமுறை

சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பின் கீழ் (ஐ.ரி.என்) இயங்கும் வசந்தம் ரி.வி மற்றும் வசந்தம் எப்.எம். வானொலி ஆகியவற்றில் கடமையாற்றும் முஸ்லிம் பணியாளர்களுக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றைக் காரணம் காட்டியே அங்கு பணியாற்றும் முஸ்லிம்களுக்கு மட்டும், இந்தக் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக, அங்கு பணியாற்றும் அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த முடிவை சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பின் பணிப்பாளர் சுதர்மன் ரதெலியகொட, அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.