'போலிச் செய்திகளுக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் வகையிலான சட்டம் கொண்டுவரப்படும்'

'போலிச் செய்திகளுக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் வகையிலான சட்டம் கொண்டுவரப்படும்'

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலிச் செய்திகளுக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் வகையிலான சட்ட மூலமொன்று விரைவில் கொண்டு வரப்படவுள்ளது என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.  

தற்போதைய சுழ்நிலையில் சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த வேண்டியது இன்றியமையாததொன்றாகும். இதற்கமைய    வே குறித்த சட்ட மூலம் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

பேச்சு சுதந்திரத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த சட்டம் கொண்டுவரப்படவில்லை எனவும் அமைச்சர் கூறினார்.

நாட்டில் ஏற்கனவே பல சட்டங்கள் காணப்படாலும், அவை சமூக ஊடகங்களுடன் தொடர்புபட்டதல்ல. அதனாலேயே சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளது என நீதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.