தொழுகையில் நடத்திய 17 பேர் கைது

தொழுகையில் நடத்திய 17 பேர் கைது

அநுராதபுர மாவட்டத்தில் உள்ள ஹொரொவ்பத்தான பகுதிக்குட்பட்ட கியூலகட கிராமத்திலுள்ள பள்ளிவாசலொன்றில் இன்று (27) வெள்ளிக்கிழமை நண்பகல் தொழுகையில் தொழுகை நடத்தியதற்காக பள்ளிவாசலின் தலைவர் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் 70 பேர் கொண்ட குழுவொன்று ஊரடங்குச் சட்டத்தையும் மதிக்காமல் லுஹர் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர்.

அச்சமயத்தில் அப்பிரதேசத்தில் வருகை தந்த ஹெப்படிபெல்லாவ  பொலிஸாரினால் இதன்போது 17 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றவர்கள் அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த 17 பேரும் தற்போது பிணையில் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை மீண்டும் பொலிஸ் நிலையம் வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தொழுகைக்கு வந்தவர்களின் வாகனங்கள் பள்ளிவாசல் வைக்கப்பட்டு குறித்த பள்ளிவாசல் தற்போது மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரவப்பொத்தான பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலில் இருந்து தவிர்ப்பதற்காக ஒன்றுகூடல்களை தவிர்க்குமாறு அரசாங்கம் தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருவதுடன் இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பல தடவைகள் தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு விளக்கங்கள் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.