கொவிட் அல்லாத மரணங்களுக்கு 24 மணி நேரத்துக்குள் இறுதிக் கிரியை நடத்த அனுமதி

கொவிட் அல்லாத மரணங்களுக்கு 24 மணி நேரத்துக்குள் இறுதிக் கிரியை நடத்த அனுமதி

கொவிட் அல்லாத மரணங்களை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்துவதால், இறுதிக் கிரியைகளை நடத்துவதில் தாமதங்கள் ஏற்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கொவிட் செயலணியின் கூட்டத்தில் பலரும் முன்வைத்தனர்.

இதனால் உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் முகங்கொடுக்கும் பொருளாதார மற்றும் ஏனைய கஷ்டங்களும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதனையடுத்து, கொவிட் காரணமாகவன்றி மரணிக்கின்றவர்களின் இறுதிக் கிரியைகளை 24 மணித்தியாலங்களுக்குள் மேற்கொள்வதற்கு அனுமதியளிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  பணிப்புரை விடுத்தார்.

கொவிட் ஒழிப்புக்கான விசேட குழு இன்று (18) வெள்ளிக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கூடிய போதே இந்த பணிப்புரை மேற்கொள்ளப்பட்டது.