பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை உயர் அதிகாரிக்கு 35 வங்கி கணக்குகள்

பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை உயர் அதிகாரிக்கு 35 வங்கி கணக்குகள்

பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள நீர் கொழும்பு சிறைச்சாலை உயர் அதிகாரி ஒருவருக்கு 35 வங்கி கணக்குகள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் குறித்த விடயம் அம்பலமாகியுள்ளது.

நீர் கொழும்பு சிறைச்சாலையில் சொகுசு மின் உபகரணங்கள் மீட்கப்பட்டதையடுத்து சிறைச்சாலை பொறுப்பதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டார். அவரது வங்கி கணக்குகளுக்கு 4 முதல் 5 தபால் உறைகளில் பணமிடப்பட்டு வழங்கப்படும். குறித்த பணத்தை சிறைச்சாலை அதிகாரி அவரது உதவியாளர்கள் ஊடாக தினமும் வங்கியில் வைப்பிட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிறைச்சாலையில் இடம்பெறும் குற்றச் செயல்கள் தொடர்பில் அண்மையில் சிறைச்சாலை அதிகாரிகளுடன் கடும் தொனியில் உரையாடியிருந்தார். ஜனாதிபதியின் விமர்சனங்களை அடுத்து நாட்டிலுள்ள சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டன. ஜனாதிபதியின் நடவடிக்கையின் பின்னர் நாட்டிலுள்ள சிறைச்சாலைகளிலிருந்து 4044 தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் மின் உபகரணங்கள், கையடக்கத் தொலைபேசிகள், சிம் அட்டைகள் ஆகியவையும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.