ஜூன் 8 இல் பள்ளிவாசல்கள் திறக்கப்படுமா?

ஜூன் 8 இல் பள்ளிவாசல்கள் திறக்கப்படுமா?

எதிர்வரும் ஜூன் 8ஆம் திகதி திங்கட்கிழமை பள்ளிவாசல்கள் திறக்கப்படும் என்ற செய்தி நேற்று (30) சனிக்கிழமை இரவு சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டது. எந்தவொரு தனிநபரையோ அல்லது அரச நிறுவனங்களையே மேற்கோள் காட்டாமல் இந்தச் செய்தி பகிரப்பட்டிருந்தது.

இதேவேளை, இந்தியாவின் மத்திய அரசு - ஊரடங்கினை படிப்படியாக தளர்த்த உத்தரவிட்டிருக்கும் சூழலில் ஜூன் 8ஆம் திகதி முதல் வழிப்பாட்டு தலங்களைத் திறக்கவும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது எனும் செய்தி இந்திய ஊடகங்களில் வெளியாகியிருந்தது.

இந்த நிலையிலேயே இலங்கையிலுள்ள பள்ளிவாசல்களும் எதிர்வரும் ஜூன் 8ஆம் திகதி திறக்கப்படும் என்ற செய்தி வைரலாக சமூக ஊடகங்களில் பரவியது. இதேவேளை, பள்ளிவாசல்கள் உள்ளிட்ட அனைத்து மத ஸ்தலங்களும் ஜூன் 8ஆம் திகதிக்குப் பின்னர் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

எனினும், மத ஸ்தளங்களில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது தொடர்பிலான வழிகாட்டியொன்று கடந்த மே 28ஆம் திகதி சுகாதார அமைச்சின்  இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கூட்டு வணக்க வழிபாடுகளுக்கு அதில் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பள்ளிவாசலை திறக்கின்ற போது கூட்டு தொழுகைக்கும் சேர்த்து அனுமதி பெறுதவற்காக அதிகாரிகளுடன் பேச்சு நடத்திக்கொண்டிருப்பதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.