'அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவின் 9 கிராம சேவகர்கள் பிரிவில் மாத்திரம் தனிமைப்படுத்தல் தொடரும்'

'அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவின் 9 கிராம சேவகர்கள் பிரிவில் மாத்திரம் தனிமைப்படுத்தல் தொடரும்'

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குப்பட்ட ஒன்பது கிராம சேவகர்கள் பிரிவில் மாத்திரம் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் தொடரும் என சுகாதார அமைச்சு தெரிவித்தது.

கடந்த நவம்பர் 26ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இந்த பொலிஸ் பிரதேசத்தின் ஒன்பது கிராம சேவகர்கள் பிரிவில் மாத்திரம் கொவிட் - 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிரித்துள்ளதை அடுத்தே சுகாதார அமைச்சு இந்த தீர்மானத்தினை முன்னெடுத்துள்ளது.

இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளரான வைத்திய கலாநிதி அசேல குணவர்த்தன கொவிட் - 19 ஒழிப்பிற்கான தேசிய நிலையத்தின் தலைவரான இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு கடிதம் மூலம் நேற்று (15) திங்கட்கிழமை அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் நடமாட்டத்திற்கான கட்டுப்பாடுகள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தனிமைப்படுத்தல் தொடரும் ஒன்பது கிராம சேவகர்கள் பிரிவின் விபரம்:

1.    அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு
•    அக்கரைப்பற்று – 5
•    அக்கரைப்பற்று – 14
•    நகர் பிரிவு – 3

2.    அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு
•    பாலமுனை – 1
•    ஒலுவில் – 2
•    அட்டாளைச்சேனை – 8

3.    ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு
•    அக்கரைப்பற்று - 8/1
•    அக்கரைப்பற்று - 8/3
•    அக்கரைப்பற்று - 9