13 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்; சிறுபான்மையினத்தவர்கள் புறக்கணிப்பு

13 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்;  சிறுபான்மையினத்தவர்கள் புறக்கணிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் 13 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான நியமனக் கடிதங்கள் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளின் பெயர் பட்டியல் முன்னர் வகித்த பதவி:

01. திரு.ஏ.ஜி. அலுத்கே - மாவட்ட நீதிபதி
02. திரு.ஆர்.ஆர்.ஜே.யு.டி.கே. ராஜகருணா - மாவட்ட நீதிபதி
03. திரு.ஆர்.ஏ.டி.யு.என். ரணதுங்க - நீதவான்
04. திரு.டி.எம்.சீ.எஸ். குணசேகர - மாவட்ட நீதிபதி
05. திரு. எம். பிரபாத் ரணசிங்க - மாவட்ட நீதிபதி
06. திரு.ஆர்.எம்.எஸ்.பி. சந்திரசிறி - பிரதான நீதவான்
07. திரு.ஆர். வெலிவத்த - மாவட்ட நீதிபதி
08. திரு.ஜி.எல். பிரியந்த - நீதவான்
09. திரு.ஏ. நிஷாந்த பீரிஸ் - மாவட்ட நீதிபதி
10. திரு.எஸ்.எம்.ஏ.எஸ். மஞ்சநாயக்க - மாவட்ட நீதிபதி
11. திரு. எல். சமத் மதநாயக்க - மாவட்ட நீதிபதி
12. திரு.வி.எம். வீரசூரிய - சிரேஷ்ட அரச சட்டத்தரணி
13. திரு.எச்.ஏ.டி.என். ஹேவாவசம் - சிரேஷ்ட அரச சட்டத்தரணி

சிரேஷ்ட தொழில் அனுபவத்தின் அடிப்படையில் புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், நாட்டில் சட்டத்தின் ஆட்சியைநிலைநாட்டவும், வழக்கு விசாரணைகளில் தாமதம் ஏற்படுவதைத் தடுக்கவும் தான் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி நீதிபதிகளிடம் தெரிவித்தார்.

எனினும், இந்த நியமனத்தில் சிறுபான்மையினத்தவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.