பங்காளி கட்சிகளுக்கு தேசியப் பட்டியலில் இடமில்லை: SJB

பங்காளி கட்சிகளுக்கு தேசியப் பட்டியலில் இடமில்லை: SJB

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் நியமனத்தில் அதன் பங்காளிக் கட்சிகளுக்கு இடம் வழங்கப்படவில்லை.

இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானமொன்றை மேற்கொண்டுள்ளதாக அக்கட்சியின் சிரேஷ்ட தலைவரொருவர் பங்காளிக் கட்சியொன்றின் தலைவரும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு முன்னணி ஆகிய பங்காளி கட்சிகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நியமனத்தில் இடம் ஒதுக்கப்படவில்லை.

இந்த நிலையிலேயே ரஞ்சித் மது பண்டார, ஹரீன் பெர்ணாண்டோ, எரான் விக்கிரமரத்ன, திஸ்ஸ அத்தநாயக்க, மயந்த திஸாநயக்க, இம்தியாஸ் பாக்கிர் மாக்கார், தயானி கமகே ஆகிய ஐக்கிய மக்கள் சக்தின் சிரேஷ்ட தலைவர்கள் அக்கட்சியின் தேசியப்பட்டியில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.