ஊரடங்கு தொடர்பான updates

ஊரடங்கு தொடர்பான updates

கொரோனா பரவல் காரணமாக நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் தொடர்பான updates ஒன்றை ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்றிரவு அறிவித்திருந்தது.

இதற்கமைய கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் எதிர்வரும் 4ஆம் திகதி திகதி ஊரடங்கு தளர்த்தப்படாததுடன் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு தொடரும்.

இதேவேளை, மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் நிறுவனங்களின் மீள் செயற்பாடுகள் எதிர்வரும் 11ஆம் திகதி ஆரம்பமாகும்.

எவ்வாறாயினும் நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 6ஆம் திகதி புதன்கிழமை இரவு 8 மணி பிறப்பிக்கப்படும் ஊரடங்கு 11ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை அமுலில் இருக்கும்.

அதேவளை, கமைய கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களிலும் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு 4ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு நீக்கப்பட்டு மீண்டும் அதே தினம் இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படும்.

இது போன்ற செயற்பாடு 6ஆம் திகதி புதன்கிழமை வரை தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.