2,000 தாண்டியது கொவிட் மரணங்கள்

2,000 தாண்டியது கொவிட் மரணங்கள்

நாட்டில் கொவிட் - 19 காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,000 ஐ தாண்டியுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் இன்று (11) வெள்ளிக்கிழமை மு.ப 11..00 மணிக்கு வெளியிடப்பட்ட தகவலின் பிரகாரம் மேலும் 101 கொவிட் மரணங்கள் இடம்பெற்றுள்ளன.

இதற்கமைய மொத்தமாக 2,011 கொவிட் - 19 மரணங்கள் நிகழ்ந்துள்ளம குறிப்பிடத்தக்கது.