OICயின் மனைவியினை ASP கடத்தியதாக முறைப்பாடு

OICயின் மனைவியினை ASP கடத்தியதாக முறைப்பாடு

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் (OIC) மனைவியினை உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ASP) கடத்தியதாக கிரிபத்கொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கம்பஹா பிராந்தியத்திலுள்ள பொலிஸ் நிலையமொன்றின் பொறுப்பதிகாரியினால் குற்றப்புலனாய்வு பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு எதிராக இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

குறித்த உதவி பொலிஸ் அத்தியட்சகர், அவரது உத்தியோகபூர்வ காரில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் மனைவியுடன் கண்டி வீதியில் பயணித்தாகவும், பின்னர் அவரை பின் தொடர்ந்த போது களனி, தலுகம பிரதேசத்திலுள்ள வர்த்தகரொருவரின் வீட்டுக்குள் நுழைந்ததாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் முறைப்பாடடில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது, இரு தரப்பிற்கும் இடையில் பாரிய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்தே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கிரிபத்கொட பொலிஸில் முறைப்பாடொன்றினை பதிவுசெய்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிபத்கொட பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

நன்றி: டெய்லிமிரர்