ஊரடங்கில் சமூக வலைத்தள பாவனை ( சில வழிகாட்டல்கள்)

ஊரடங்கில் சமூக வலைத்தள பாவனை ( சில வழிகாட்டல்கள்)

எம்.ஏ.எம். அஹ்ஸன்

கொரோனா வைரஸ் அச்சம் உல­கெங்கும் தலை தூக்­கி­யுள்ள நிலை­மையில் ஒவ்­வொரு நாடு­க­ளிலும் பிறப்­பிக்­கப்­பட்­டுள்ள ஊர­டங்குச் சட்டம் மற்றும் வெளியில் செல்­வதில் உள்ள சுகா­தார பிரச்­சி­னைகள் என்­ப­வற்றை கருத்தில் கொண்டு அனை­வரும் தத்­த­மது வீடு­களில் முடங்­கி­யுள்ளோம்.

அதே நேரம் வீட்டில் பெரு­ம­ள­வி­லான நேரத்தை செல­வி­டு­வதால் எம்­ம­வர்­களின் சமூக வலைத்­தள பாவ­னையின் வீதம் நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கின்­றது. சாதா­ர­ண­மாக ஒரு பதின்ம வயது அல்­லது இளைஞர் ஒருவர் முக­நூலில் சுமார் 2 - 4 மணித்­தி­யா­லயம் வரை நேரத்தைச் செல­வி­டு­கிறார். இந்த விட­யத்தை ஆரோக்­கி­ய­மான ஒரு விட­ய­மாக கருத முடி­யாது என்­பதை பலர் உண­ராமல் இருப்­ப­துதான் வேதனை.

வெளியில் செல்­லாமல் வீட்­டுக்­குள்­ளேயே இருப்­பது என்­பது எத்­தனை சிர­ம­மான விடயம் என்­பதை நாம் அனை­வரும் நன்கு உணர்ந்­த­வர்­களே. வீட்­டுக்­குள்­ளேயும் இருக்க வேண்டும். சமூக வலைத்­த­ளங்­க­ளையும் பாவிக்­கக்­கூ­டாது என்­பது யாருக்கும் நியா­ய­மான ஒரு விட­ய­மாக இருக்­காது.

முற்­று­மு­ழு­தாக அதன் பாவ­னையை தவிர்க்க வேண்டும் என்று யாராலும் விவா­திக்­க­மு­டி­யாது. ஏனென்றால் இன்று பல­ரது வாழ்க்­கையில் சமூ­க­வ­லைத்­தளம் ஓர் அங்­க­மாக மாறி விட்­டது. அள­வுக்கு மிஞ்­சினால் அமிர்­தமும் நஞ்சு என்­பதன் அடிப்­ப­டையில் சமூக வலைத்­தள பாவ­னையால் விளையும் தீமை­களை கருத்­தில்­கொண்டு அள­வாக அதை பயன்­ப­டுத்­தினால் ஆரோக்­கி­ய­மான ஒரு சமூ­கத்தை கட்­டி­யெ­ழுப்­பலாம்.

சமூக வலைத்­த­ளங்­களின் தீமைகள்

இலங்­கையை பொறுத்­த­வ­ரையில் இன்று அனை­வரும் பேஸ்புக் என்ற சமூக ஊட­கத்­தைத்தான் பயன்­ப­டுத்­து­கின்­றார்கள். மேற்­சொன்­னது போல் பேஸ்புக் பெரும்­பா­லா­னோரின் வாழ்க்­கையில் ஓர் அங்­க­மாகி போதை அதா­வது  என்ற நிலையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

ஊர­டங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப்­ப­கு­தியில் செய்­தி­களை உட­னுக்­கு­டன தெரிந்து கொள்ள அனை­வரும் பேஸ்­புக்­கினை பயன்­ப­டுத்­து­கின்­றார்கள் என்­பதை ஆரோக்­கி­ய­மான விட­ய­மாக கரு­தி­னாலும் கூட தேவை­யின்றி நட்பு வட்­டா­ரத்தை பெருக்கிக் கொள்­ளுதல், போலிச் செய்­தி­களை பதி­வி­டுதல், இன­வாதம் பேசுதல், தவ­றான உற­வு­களை பேணுதல் என்­ப­வற்றை ஆரோக்­கி­ய­மான ஒரு விட­ய­மாக கருத முடி­யாது.

கொரோனா வைர­ஸினைப் போல சமூக வலைத்­த­ளங்­களும் இன மத வயது பால் வேறு­பா­டின்றி அனை­வ­ரையும் தாக்­கி­யுள்­ளது. இதனால் தமது பொன்­னான நேரத்தை இழந்து கைசே­தப்­ப­டு­ப­வர்கள் ஒரு குறிப்­பிட்ட வர்க்­கத்தைச்  சேர்ந்­த­வர்கள் மாத்­திரம் கிடை­யாது. ஆனால் இன்று சமூக வலைத்­த­ளங்­களின் பாவ­னைக்கு அடி­மை­யா­கி­யுள்­ள­வர்­களின் எண்­ணிக்கை எங்­கேயோ சென்று விட்­டது. இதை ஒரு பிரச்­சிi­னாக யாரும் உண­ராமல் இருப்­பதே இதற்கு தீர்வு இல்­லாமல் இருப்­ப­தற்குக் காரணம்.

உங்­க­ளுக்கு 'நோமோ­போ­பியா" இருக்­கி­றதா?

நோமோ­போ­பியா என்றால் என்ன என்று யோசிக்­கி­றீர்­களா? இது பதற்­றத்தை எற்­ப­டுத்தும் ஒரு­வகை உள­வியல் சார்ந்த வியாதி. போபியா என்­பது தேவை­யற்ற பதற்­றத்தை குறிக்கும். இது பல வகை­களில் இருக்கும்.

இன்று அறிந்தும் அறி­யாமல் பல­ருக்கு இருக்கும் வியா­தி­யாக நோமோ­போ­பி­யாவை குறிப்­பி­டலாம். நாம் எமது தொலை­பே­சியை ஏதா­வது ஒரு கார­ணத்­தினால் கொஞ்ச நேரத்­துக்குப் பயன்­ப­டுத்த முடி­யாமல் போய்­விட்டால் எமக்கு ஒரு பதற்றம் வரு­மானால் அது நோமோ­போ­பியா என்ற உள­வியல் பிரச்­சி­னை­யாகும். மருத்­துவ ஆலோ­சனை பெறாத வரை இந்த நோய் குண­மா­கு­வ­தற்­கான வாய்ப்பு மிகக்­கு­றைவு.

காலையில் எழுந்­த­வுடன் மொபைலை தேடுதல், தூங்­கச்­செல்லும் முன்னர் மொபைலை பார்த்தல், அடிக்­கடி மொபை­லுக்கு சார்ஜ் ஏற்­றுதல், எப்­போதும் தனது பார்­வையின் கீழ் மொபைல் இருக்க வேண்டும் எனக்­க­ரு­துதல் என்­பன நோமோ­போ­பி­யா­வுக்­கான அறி­கு­றி­க­ளாகும்.

மூன்றாம் உலக நாடுளில் சுமார் 66 சத­வீ­த­மான மக்கள் இந்த நோயினால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக மொபைலை அடிப்­ப­டை­யாகக் கொண்டு மேற்­கொள்­ளப்­பட்ட ஓர் ஆய்வில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஊர­டங்கு நிலவும் காலப்­ப­கு­தியில் இந்த நோயின் வீதம் அதி­க­ரிக்­கலாம் என்­பது உள­வி­ய­லா­ளர்­களின் கருத்­தாகும்.

போலிச் செய்­திகள்

இது அதிகம் தக­வல்­களை பரப்பும் கால­மாகும். இக் காலத்தில் அதி­க­மாக அனை­வரும் செய்­தி­களை நாடு­கின்­றார்கள். இதனால் பதிவு செய்­யப்­ப­டாத செய்தி நிறு­வ­னங்கள் பயிற்சி பெறாத ஊட­க­வி­ய­லா­ளர்கள் என சமூக வலைத்­தளம் முழுக்க ஒரு­வ­ருக்­கொ­ருவர் செய்­தி­களை பரி­மா­று­வதில் ஒரு போட்­டித்­தன்மை காணப்­ப­டு­கின்­றது.

இந்த போட்டித் தன்­மை­யினால் பலரும் தமக்கு கிடைத்த செய்­தி­களை உறு­திப்­ப­டுத்­தாமல் பதி­வி­டு­கின்­றார்கள். இது ஓர் அசா­தா­ர­ண­மான பிரச்­சி­னை­யாகும். கொரோனா வைரஸ் தொடர்­பான போலிச் செய்­தி­க­ளுக்கு எந்­த­வி­த­மான பஞ்­சமும் இப்­போது இல்லை. அண்­மையில் அர­சாங்கம் மாண­வர்­க­ளுக்கு இல­வ­ச­மாக மடி­க­ணினி வழங்­கு­வ­தாக கூறி போலிச் செய்தி வந்­தது. வட்சப் செய­லியில் பர­வ­லாக பகி­ரப்­பட்ட இந்தச் செய்தி போலி­யா­னது என இலங்கை பத்­தி­ரிகை ஸ்தாபனம் உறு­திப்­ப­டுத்­தி­யது.

அது­போல கத்­தோ­லிக்க திருச்­சபை ஆயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் கிறிஸ்­த­வர்­களின் உடலை எரிப்­ப­தற்கு அனு­ம­திக்கப் போவ­தில்லை என்று தெரி­வித்­த­தாக போலிச் செய்­திகள் பர­வின. தான் அவ்­வா­றா­ன­தொரு விட­யத்தை வெளி­யி­ட­வில்லை என திருச்­சபை ஊடகம் உறு­திப்­ப­டுத்­தி­யது.

கொரோனா தொற்­றுக்­குள்­ளாகும் நபர் மற்றும் கொரோனா தொற்­றினால் உயி­ரி­ழக்கும் நபர் என்­பன தொடர்­பாக பல போலிச்­செய்­திகள் உரு­வா­கின. மேலும் இதன்­மூலம் இன­வாத பிர­சா­ரங்­களும் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டன. உண்­மையில் கொரோனா ஒரு மதம் சார்ந்த பிரச்­சினை கிடை­யாது.

ஆனால் இலங்கை மற்றும் இந்­தியா ஆகிய நாடு­களில் இன­வா­தி­க­ளுக்கு கிடைத்த ஒரு பொக்­கிஷமாக கொரோனா இருந்து வரு­கின்­றது. இதனை கருத்தில் கொண்டு கொரோனா தொற்­றினால் பாதிக்­கப்­படும்,  உயி­ரி­ழக்கும் நபர்­களின் பெயர் விப­ரங்­களை வெளி­யிட வேண்டாம் என அர­சாங்கம் வேண்­டி­யுள்­ளது.

எதா­வது ஒன்றைச் செய்ய வேண்டும் என்­ப­தற்­காக சமூக விரோ­திகள் இந்த சமூக வலைத்­த­ளத்தில் ஏதோ ஒன்றை பகிர்ந்து விடு­கின்­றார்கள். செய்­தி­களை அவ­ச­ர­மாக வழங்­கு­வதை விட உண்மை என உறு­திப்­ப­டுத்­தி­விட்டு வழங்­கு­வதன் அத்­தி­ய­வ­சி­யத்தை ஊட­கங்கள் பெரும்­பாலும் சரி­வர செய்­கின்­றன.

ஆனால் சமூக ஊட­கங்­களில் செய்­தி­களை பகிர்­வதில் உள்ள போட்டி போலிச்­செய்தி உரு­வா­வ­தற்­கான பிர­தான கார­ண­மாக அமைந்து விடு­கின்­றது. சம­கா­லத்தில் நாம் பொது வெளியில் சமூக இடை­வெ­ளியைப் பேணு­வதைப் போன்றே சமூக ஊட­கங்­க­ளிலும் இடை­வெ­ளியை பேணு­வதன் அவ­சியம் தொடர்­பாக ‘விடி­வெள்ளி’ பத்­தி­ரி­கையின் பிர­தம ஆசி­ரியர் எம்.பி.எம். பைறூஸ் அண்­மையில் ஒரு நேர்­கா­ணலில் தெரி­வித்­தி­ருந்தார்.

அதில் அவர் சமூக ஊட­கங்­களில் செய்­தி­களை உட­னுக்­குடன் பகிர்ந்து தம்மை ஊட­க­வி­ய­லாளர் என்ற அங்­கீ­கா­ரத்தைப் பெற முயற்சி செய்­ப­வர்கள் மிகக்­க­வ­ன­மான முறையில் செய்­தி­களை பகிர வேண்டும். ஊட­கத்­துறை என்­பது மிகவும் நுணுக்­க­மான ஒரு துறை­யாகும். செய்­தி­களை எழு­துதல் பகிர்தல் என்­ப­வற்­றுக்கு பிரத்­தி­யே­க­மாக ஊட­க­வி­ய­லா­ளர்கள் பயிற்­று­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

அவர்கள் தவிர ஏனை­ய­வர்கள் செய்­தி­களை வாசிப்­ப­துடன் மிக அவ­சி­ய­மாக இருந்தால் மாத்­திரம் அதைப் பகிர்ந்து சமூக ஊட­கத்தில் சமூக இடை­வெ­ளியை பேண வேண்டும். செய்­தி­களை பகிர்­வ­தற்கு பயிற்­று­விக்­கப்­பட்ட ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு அவர்­க­ளது வேலையை செய்­வ­தற்கு இட­ம­ளித்து தாம் ஒதுங்­கி­யி­ருப்­பதே சிறந்­த­தாகும். இல்­லா­விடின் சமூகம் பாரிய பிரச்­சி­னை­களை சந்­திக்கும் என்றார்.  

எவ்­வாறு பயன்­ப­டுத்­தலாம்?

அதற்­காக சமூக வலை­த­ளங்­களை பயன்­ப­டுத்­தாது தவிர்ந்­தி­ருங்கள் என நாம் அறி­வு­றுத்­த­வில்லை. இதன் பாவனை இருக்க வேண்டும் என்று கூறும் அதே வேளை அது ஒரு வரை­ய­றைக்குள் இருக்க வேண்டும் என்­பதே அனை­வ­ருக்கும் தேவை­யான ஒரு விட­ய­மாகும். சமூக வலைத்­த­ளங்­களின் பாவனையை கட்­டுப்­ப­டுத்தி அதனை அள­வாக ஒரு வரை­ய­றைக்குள் எவ்­வாறு பயன்­ப­டுத்­தலாம் என்­பது பற்றி உள­வ­ளத்­து­ணை­யாளர் லுக்மான் ஹக்கீம் பின்­வ­ரு­மாறு விளக்­கினார்.

“அனை­வரும் வீட்டில் இருக்கும் இந்த தரு­ணத்தில் எல்­லோ­ருக்கும் இருக்­கின்ற பிர­தான பொழு­து­போக்­காக தொலை­பே­சியும் சமூக வலைத்­த­ளங்­க­ளும்தான் மாறி­யுள்­ளன. எந்த வேலையும் இல்­லாத இந்த தரு­ணத்தில் சமூக வலைத்­த­ளங்­களை பாவிக்­காதே என்று யாரி­டமும் சொல்ல முடி­யாது.

ஆனால் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான ஆலோ­ச­னையை வழங்­கலாம். சாதா­ர­ண­மாக ஒருவர் ஒரு நாளைக்கு 45 நிமிடம் வரை சமூக வலை­த­ளங்­களை பயன்­ப­டுத்­தலாம். இந்த கால அளவு சிறு­வர்கள் பெண்கள் இளை­ஞர்கள் மற்றும் முதி­ய­வர்­க­ளுக்கும் பொருந்தும்.

ஒரு நாளைக்கு 3 அல்­லது 4 மணித்­தி­யா­லயம் சமூக வலை­தள பாவ­னையில் இருப்­பது உள­வியல் ரீதி­யான பிரச்­சி­னை­களை தோற்­று­விக்கும். கொரோனா வைரஸ் தொடர்­பான செய்­தி­களை மக்கள் அடிக்­கடி பார்ப்­பது மற்றும் கேட்­பது உள­வியல் பிரச்­சி­னைக்கு வழி­வ­குக்கும்.

அடிக்­கடி கொரோனா தொடர்­பாக எதிர்­மறையான விட­யங்­கள எங்­க­ளது காதுகள் கேட்­கின்­றன. இதனால் எதிர்­மறை சிந்­தனை ஒன்று எமக்குள் உரு­வா­கி­விடும். இதனைத் தவிர்க்க கொரோனா பற்­றிய தர­வு­களை தேடு­வதைக் காட்­டிலும் ஏனைய விட­யங்­களில் கவனம் செலுத்­து­வது சிறந்­த­தாக அமையும்.

குடும்ப சூழலில் நேரத்தைச் செல­விட நல்­ல­தொரு வாய்ப்பு கிடைத்­துள்ள இந்த சந்­தர்ப்­பத்தில் அனை­வரும் அதற்கு வழி செய்ய வேண்டும். மனைவி மற்றும் பிள்­ளை­க­ளுடன் அதிக நேரத்தை செல­விட முயற்­சிக்க வேண்டும். வீட்டில் இருக்கும் பலர் சமுக வலைத்­த­ளங்­களில் தவ­றான தொடர்­பு­களை ஏற்­ப­டுத்­திக்­கொண்டு அந்த வாய்ப்­பையும் இழந்து நிற்­கி­றார்கள்.

மேலும் பலர் பாலியல் காணொ­லி­க­ளுக்கும் அடி­மை­யாகி இருக்­கி­றார்கள். இந்த நிலை­மையில் இருந்து விடு­பட சுய நேர­சூசி ஒன்றை அமுல்­ப­டுத்த இரவு 9 மணிக்குப் பின்னர் தொலை­பே­சியை பயன்­ப­டுத்­து­வ­தில்லை என்று ஒருவர் திட­சங்­கற்பம் பூண்டு அதை நடை­மு­றைப்­ப­டுத்­தினால் இவற்­றி­லி­ருந்து விடு­ப­டலாம்.

என்­றாலும் இவ்­வா­றான விட­யங்கள் குறு­கிய காலத்தில் தீர்வு காணக்­கூ­டிய விட­யங்கள் இல்லை என்­ப­தையும் சொல்ல வேண்­டி­யது. அத்­துடன் குறிப்­பிட்ட சிலரை வைத்­துக்­கொண்டு இவற்­றுக்குத் தீர்வு காண முடி­யாது. தனி­ம­னி­த­னாக ஒவ்­வொ­ரு­வரும் தாம் இந்த நிலைக்குச் செல்­லாமல் இருக்க வேண்டும் அல்­லது இந்த நிலை­மையில் இருந்து விடு­பட வேண்டும் என்று நினைக்­காத வரை இதற்கு தீர்வு கிடை­யாது.

வழக்­க­மாக நாம் செய்­கின்ற விட­யங்கள் உட்­பட எங்­க­ளு­டைய தொழி­லுக்கு பாதிப்பு இல்­லா­த­வா­றுதான் சமூக வலைத்­த­ளங்­களின் பாவனை இருக்க வேண்டும். உதா­ர­ண­மாக, குளித்தல் சாப்­பி­டுதல் போன்ற அடிப்­படை விட­யங்கள் தொழுகை நோன்பு போன்ற சமய விட­யங்கள் என்­ப­வற்­றுக்கு பாதிப்பு இருக்­கு­மானால் அது போதை என்ற ஒரு நிலை­யாகும்.

இவ்­வா­றா­ன­வர்கள் நிச்­ச­ய­மாக தம்மை மாற்­றிக்­கொள்­வ­தற்­கான சுய ஒழுங்கை மேற்கொள்ள வேண்டும். சிறுவர்களை பொறுத்த வரையில் அவர்களுக்கு இணையவழிக் கல்விக்கு அவர்களை ஊக்குவிக்கலாம். அவர்களுக்கு தொலைபேசியை கொடுக்கும்போது கட்டாயமாக பெற்றோர் அல்லது பாதுகாவலரின் மேற்பார்வையின் கீழ் அவர்களுக்கு தொலைபேசியை வழங்க வேண்டும்".

இன்று இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இணையவழி பயிற்சி நெறிகள் மற்றும் சூம் செயலி மூலம் இணையவழிக் கூட்டங்கள் போன்ற நல்ல விடயங்களும் நடைபெறாமல் இல்லை. இவ்வாறான விடயங்களுக்கு எம்மை பழக்கப்படுத்துவது ஒரு நல்ல விடயமாக அமையும்

இணையவழி வாசிப்பு இணையவழிக் கற்றல் மற்றும் சமூக வலைதளங்களில் அறிவியல் மற்றும் சமயம் சம்பந்தப்பட்ட ஆரோக்கியமான விவாதம் என்பன நல்லதொரு தலைமுறையை உருவாக்கும். அது தவிர்ந்த தகாத உறவு, பாலியல் சுரண்டல், பாலியல் காணொலிகளை பாரத்தல் மற்றும் வீணாக சமூக வலைத் தளங்களுக்கு அடிமையாகுதல் என்பன தேவையற்ற உடல் உள பிரச்சினைகளை உருவாக்கும்.

எனவே அனைவரும் சமூக வலைதளங்களிலும் தொலைபேசியிலும் கடத்தும் காலத்தை குறைத்துக் கொண்டு ஏனைய விடயங்களில் கவனம் செலுத்தி இந்த ய்வு காலத்தை பயனுள்ள முறையில் கழிக்க முன்வர வேண்டும்.