OPPO அதன் தனித்துவமான Find X5 தொடரை பெப்ரவரி 24இல் வெளியிடுகின்றது

OPPO அதன் தனித்துவமான Find X5 தொடரை பெப்ரவரி 24இல் வெளியிடுகின்றது

ஸ்மார்ட் சாதனங்களில் முன்னணியில் திகழும் தரக்குறியீடான OPPO, உலகின் முதலாவது புகைப்படவியல் அனுபவங்களைக் கொண்ட அதன் உயர்நிலை, தனித்துவ ஸ்மார்ட்போனான OPPO Find X5 தொடரின் அறிமுகம் தொடர்பில் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

சிறந்த தரத்திலான தொழில்நுட்பம் மற்றும் கெமரா புத்தாக்க கண்டுபிடிப்புகளுடன் OPPO, ஆச்சரியமளிக்கக் கூடிய உயர் நிலையிலான வடிவமைப்பை அறிமுகம் செய்கிறது. உலகளாவிய Find X5 தொடர் வெளியீட்டு நிகழ்வுகளை காண OPPO வின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் (www.oppo.com/en/events/find-x5-series-launch/) ஊடாக, பெப்ரவரி 24ஆம் திகதி 11:00 மணிக்கு (இலங்கை நேரப்படி 16.30) OPPO உடனும் #EmpowerEveryMoment ஹேஷ்டேக் ஊடாகவும் இணையுங்கள்.

OPPO INNO Day 2021 இல், OPPO அதன் MariSilicon X தொடர்பில் அறிவித்திருந்தது. இது பிரத்தியேக புகைப்படவியல் நரம்பியல் அமைப்பாக கருதப்படும் Neural Processing Unit ஆகும்.

இது ஸ்மார்ட்போனில் வீடியோக்களை எடுப்பதிலுள்ள மிகப்பெரிய சவாலான இரவு நேர வீடியோ பதிவை இலகுவாக்குகிறது. அதிநவீன 6nm கட்டமைப்பு, நிகழ்நேர RAW செயலாக்கம், 20 மடங்கு வேகமான 4K AI செயல்திறன் ஆகியவற்றின் மூலம் வீடியோ தரத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வதன் மூலம், Find X5 Pro ஆனது இரவில் அதன் திறமையை வெளிப்படுத்துகிறது.

Find X5 Pro புதிய தலைமுறை, multicore Snapdragon 8 Gen 1 processor மூலம் இயக்கப்படுவதால், எவ்வகையான உச்ச பயன்பாட்டின் போதும் தடையின்றி இயங்குவதுடன், மிகவும் பிரபலமான பாரிய செயற்பாடுகளைக் கொண்ட கேம்கள் மற்றும் செயலிகளைக் கையாளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

வெளிப்புற தோற்றத்தில், அமைதியான மற்றும் எக்காலத்திற்கும் பொருத்தமான அழகியல் உணர்வை வெளிப்படுத்தும் ஒரு எதிர்கால வடிவமைப்பை இது கொண்டுள்ளது.

மிக கடினமான, அசல் செரமிக் பின்பகுதியைக் கொண்டுள்ள Find X5 Pro ஆனது, தூய, நவீன நுட்பத்தை கொண்டிருப்பதுடன், அதன் உடலில் ஏற்படும் கைரேகை பதிவுகளைக் காண்பிப்பதனை குறைக்கும் வகையிலான மேற்பரப்பையும் கொண்டுள்ளது. கெமரா தொகுதியை மிருதுவானதாக மெருகூட்டுவதற்காக, முழுமையான மென்மையான, சீரான, சாய்வும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தன்னிகரற்ற இரவு நேர புகைப்படவியலுக்கான திறன்களுடன், உயர்நிலை 5G கொண்ட OPPO வின் தனித்துவ X5 Pro ஆனது, நுகர்வோர் மற்றும் தொழில்நுட்ப விமர்சகர்களிடையே வெற்றியடையும் முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது.

காலத்ததிற்கு ஏற்ற அழகியல், புதிய ColorOS, உலகத்தரம் வாய்ந்த செயல்திறன், அதிவேக இணைப்பு, உலகத்தை கடந்த கெமரா அமைப்புடன், Find X5 Pro ஆனது ஸ்மார்ட்போன்களின் எல்லைகளை கடக்கிறது.

OPPO இன் உத்தியோபூர்வ தளத்தின் (www.oppo.com/en/events/find-x5-series-launch/) ஊடாக பெப்ரவரி 24ஆம் திகதி, வியாழக்கிழமை 11:00 (இலங்கை நேரப்படி 16.30) மணிக்கு #EmpowerEveryMoment ஹேஷ்டேக் மூலம் உலகளாவிய ஒன்லைன் வெளியீட்டு நிகழ்வில் இணையுங்கள்.

OPPO, முன்னணி ஸ்மார்ட்போன் நாமமாகும். அதன் முதலாவது ஸ்மார்ட் போனான 'Smiley Face' யினை 2008 இல் அறிமுகப்படுத்தியதிலிருந்து, அது அழகியல் திருப்தி மற்றும் புதுமையான தொழில்நுட்பம் ஆகியவற்றை இணைத்தவாறு இடைவிடாமல் தொடர்ச்சியாக பேணி வருகிறது.

இன்று, OPPO தனது வாடிக்கையாளர்களுக்கு Find மற்றும் Reno தொடர்களின் கீழான பரந்த அளவிலான ஸ்மார்ட் சாதனங்களை வழங்குகிறது. அதன் சாதனங்களுக்கு அப்பால், ColorOS இயங்குதளம், அதே போன்று OPPO Cloud மற்றும் OPPO + போன்ற இணைய சேவைகளையும் அது வழங்குகின்றது.

OPPO, உலகளாவிய ரீதியில் 50 இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் செயற்படுவதுடன், OPPO வின் 40,000 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் உலகெங்கிலும் உள்ள அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வாழ்வியலை உருவாக்க அர்ப்பணித்துள்ளனர்.