இறக்குமதி செய்யப்படும் தைத்த ஆடைகளுக்கு விசேட வரி

இறக்குமதி செய்யப்படும் தைத்த ஆடைகளுக்கு விசேட வரி

இறக்குமதி செய்யப்படும் தைத்த ஆடைகளுக்கு விசேட வரியொன்று விதிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தயாசிரி ஜயசேகர தெரிவித்தார்.

எதிர்வரும் ஏப்ரல் 1ஆம் முதலாம் திகதியிலிருந்து இந்த வரி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

உள்நாட்டு ஆடை கைத்தொழில் துறையினை பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த வரி அறிமுகப்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

இதற்கமைய இறக்குமதி செய்யப்படும் தைத்த ஆடைகளுக்கு 200 ரூபா முதல் 450 ரூபா வரை வரி விதிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.