நோயியல் கழிவுகளை கொண்டு செல்லும் வாகனத்தை மாற்றியமைக்க அமெரிக்கா நிதியுதவி

நோயியல் கழிவுகளை கொண்டு செல்லும் வாகனத்தை மாற்றியமைக்க அமெரிக்கா நிதியுதவி

அம்பாறையிலுள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் நோயியல் கழிவுகளை (Pathological Waste) பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கு வாகனத்தினை மாற்றியமைக்க அமெரிக்காவின் அமெரிக்கா நிதியுதவி வழங்கியுள்ளது.

நோயியல் கழிவுகளை அகற்றுவதை முறையாக நிர்வகிக்க ஏற்கனவே இருக்கும் ட்ரக் ரக வாகனமென்றை மாற்றியமைக்க அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரான வைத்தியர் பிரசங்க சேரசிங்க உதவி கோரினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, கொவிட் - 19 தொற்றுப் பரவலின் போது சமூகத்திற்கு ஏற்படும் அபாயங்களைக் குறைக்க உதவும் வகையில் வாகனத்தை மாற்றியமைப்பதற்கு அமெரிக்கா நிதியுதவியளித்தது.

மேம்படுத்தப்பட்ட இந்த வாகனத்தை USAID நிறுவனத்தின் பிரதி பணிப்பாளர்  டெப்ரா மோசல் அண்மையில் இணையவழி மூலம் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

அம்பாறை பிராந்திய சுகாதார பணிப்பாளர் அலுவலகம் மற்றும் அமெரிக்க மக்களின் உதவியினால் இந்த வாகனம் மாற்றியமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.