தேசிய பட்டியல் நியமனத்தில் விளையாட வேண்டாம்: மனோ

தேசிய பட்டியல் நியமனத்தில் விளையாட வேண்டாம்: மனோ

தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் நியமனம் தொடர்பில் விளையாட வேண்டாம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரான மனோ கணேசன் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின தேசியப் பட்டியல் விவகாரம் தொடர்பில் ஆராயும் கூட்டமொன்று நேற்றிரவு அக்கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக் கட்சிகளான தமிழ் முற்போக்கு கூட்டணி (6) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (5) மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (4) ஆகிய கட்சிகள் 15 ஆசனங்களை இந்த தேர்தலில் கைப்பற்றியுள்ளன.

இந்த நிலையில் தேசியப் பட்டியல் பங்கீடு தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்திக்குள் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இவ்வாறன நிலையில் குறித்த கட்சிகள் தேசியப் பட்டியல் நியமனத்தில் புறக்கணிக்கப்படுமாயின் பாராளுமன்றத்தில் தனிக்குழுவாக அமர வேண்டி வரும் என எச்சரிக்கை விடுத்துள்ளதாக மனோ கணேசன் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் மற்றும் றிசாத் பதியுதீன் ஆகியோரினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் திங்கட்கிழமை வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.