மலேசிய லிங்கன் பல்கலை - லிஸ்ப்ரொ அகடமிக்ஸ் இடையிலான ஒப்பந்தம்

மலேசிய லிங்கன் பல்கலை - லிஸ்ப்ரொ அகடமிக்ஸ் இடையிலான ஒப்பந்தம்

இலங்கை பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழுவினால் அங்கிகரிக்கப்பட்ட பட்டப்படிப்பினை வழங்கிவரும் மலேசிய லிங்கன் பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்பை இலங்கையில் அனுராதபுரம், கல்முனை பிரதேச மாணவர்கள் பெற்றுக்கொள்ளும் முகமாக லிங்கன் பல்கலைக்கழகத்திற்கும் லிஸ்ப்ரொ அகடமிக்ஸ் இற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் அண்மையில் கைச்சாத்திடப்பட்டது.

மலேசிய லிங்கன் பல்கலைக்கழகத்தின் சார்பில் அதன் துணை வேந்தர் பேராசிரியர் டாக்டர் அமியா பகுமிக் அவர்களும் லிஸ்ப்ரொ நிறுவனத்தின் சார்பில் இயக்குனர் குழாம் அங்கத்தவர் சுகைல் ஜமால்தீன் அவர்களும் பிரசன்னமளித்து கைச்சாத்திட்டனர்.