'பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் அறிக்கைகளை விரும்பிய ஒரு மொழியில் மாத்திரமே பெற முடியும்'

'பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் அறிக்கைகளை  விரும்பிய ஒரு மொழியில் மாத்திரமே பெற முடியும்'

பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் அறிக்கைகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு விரும்பிய ஒரு மொழியில் மாத்திரம் பெற்றுக்கொள்வதற்கான முறைமையொன்றை உருவாக்கியிருப்பதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன சபையில் அறிவிப்பொன்றை விடுத்துத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் வருடாந்த அறிக்கைகள், செயற்றிறன் அறிக்கைகள் மற்றும் ஏனைய அறிக்கைகளின் அச்சுப் பிரதிகளை மூன்று மொழிகளிலும் வழங்குவதால் ஒவ்வொரு அமைச்சுக்கும் பாரிய செலவு ஏற்படுவது தொடர்பில் கடந்த 17ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இதற்கமைய ஏற்படும் அதிக செலவீனத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அந்த அறிக்கைகளை ஒவ்வொரு உறுப்பினரும் விரும்பும் மொழியில் மாத்திரம் பெற்றுக்
கொடுப்பது பொருத்தமானது என இங்கு தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைய ஒவ்வொரு உறுப்பினரும் குறித்த அறிக்கைகளைப் பெற்றுக் கொள்ள விரும்பும் மொழி என்ன என்பதை தனித்தனியாக அறிந்துகொள்வதற்கும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

இது தொடர்பில், ஒப்புதல் பெறத் தயாரிக்கப்பட்ட கடிதத்தின் ஊடாக அறிக்கைகளைப் பெற விரும்பும் மொழியை விரைவில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார்.