எம்.பிக்களுக்கான வாகன இறக்குமதியை இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானம்

எம்.பிக்களுக்கான வாகன இறக்குமதியை இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானம்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன இறக்குமதியினை இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

குறித்த நடவடிக்கைக்கு எதிராக சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்பட்ட விமர்சனத்தினை அடுத்தே அமைச்சரவை இந்த தீர்மானத்தினை மேற்கொண்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (24) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பிரதமரின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்கள் அல்லது இறக்குமதியை இடைநிறுத்துவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (24) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீPர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் சூம் தொழில்நுட்பம் ஊடாக இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போதே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலை மற்றும் நிதி நிலை தொடர்பில் கவனம் செலுத்தி வாகன இறக்குமதியை மேலும் மட்டுப்படுத்த வேண்டியுள்ளதாக அமைச்சரவையில் அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதற்கமைய குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்கள் அல்லது இறக்குமதி செய்வது தொடர்பில் இதற்கு முன்னதாக காணப்பட்ட திட்டத்தை அமைச்சரவை தீர்மானத்திற்கமைய தொடர்ந்து இடைநிறுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.