தேர்தல் சீர்திருத்தம் தொடர்பில் ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழு நியமனம்

தேர்தல் சீர்திருத்தம் தொடர்பில் ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழு நியமனம்

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (05) புதன்கிழமை சபையில் வெளியிட்டார்.

15 உறுப்பினர்களைக் கொண்ட இந்த குழுவிற்கு சபை முதல்வரும், வெளிவிவகார அமைச்சருமான தினேஷ்குணவர்த்தன தலைமை தாங்குவார்.

இந்த பாராளுமன்ற விசேட குழுவின் உறுப்பினர்களா அமைச்சர்கள் நிமல் சிறிபால த
சில்வா, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், பவித்ராதேவி வன்னிஆரச்சி, டக்ளஸ் தேவானந்தா, விமல் வீரவங்ச, எம். யூ. எம். அலி சப்ரி இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான அநுர குமார திசாநாயக்க, கபீர் ஹஷீம், ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார, மனோ கணேசன், எம்.ஏ. சுமந்திரன், மதுர விதானகே, சாகர காரியவசம் ஆகியோர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் சபாநாயகர் அறிவித்தார்.