மக்கள் காங்கிரஸின் பதில் தலைவராக சஹீட் நியமனம்

மக்கள் காங்கிரஸின் பதில் தலைவராக சஹீட் நியமனம்

றிப்தி அலி

அகில மக்கள் காங்கிரஸின் பதில் தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட் நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான றிசாத் பதியுதீன், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வு பிரிவில் 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இவர் விடுதலை செய்யப்படும் வரை கட்சியின் நடவடிக்கைகளை வினைத்திறனாக முன்னெடுப்பதற்கு தேவையான சில அதிகாரங்களை வழங்கும் நோக்கிலேயே இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அகில மக்கள் காங்கிரஸின் அரசியல் உயர் பீடம் கடந்த செவ்வாய்க்கிழமை (04) கொழும்பில் கூடிய போதே  பதில் தலைவர் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

"கட்சியின் தலைவர் றிசாத் பதியுதீனின் ஆலோசனையுடனேயே இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதுவொரு தற்காலிகமானது" என அகில மக்கள் காங்கிரஸின் சட்ட ஆலோசகர் றுஸ்தி ஹபீப் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கடந்த 2005ஆம் ஆண்டு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட போது அதன் ஸ்தாபக தலைவராக தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.