ஆபத்தில் உதவும் நண்பணே உண்மையான நண்பன்: சீன தூதுவர்

ஆபத்தில் உதவும் நண்பணே உண்மையான நண்பன்: சீன தூதுவர்

"ஆபத்தில் உதவும் நண்பணே உண்மையான நண்பன்" என இலங்கைக்கான சீன தூதுவர் ச்சி சென்ஹோங் தெரிவித்தார்.

சீனாவினால் இரண்டாம் கட்டமாக அன்பளிப்புச் செய்யப்பட்ட 5 இலட்சம் கொவிட்-19 தடுப்பூசிகள் நேற்றிரவு கொழும்பை வந்தடைந்தன. இதனை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் அமைச்சர்களான பவித்ரா வன்னியாராச்சி, நாமல் ராஜபக்ஷ, பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசூமான மற்றும் சீன தூதுவர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவா அங்கு தொடர்ந்து உரையாற்றிய சீன தூதுவர் ச்சி சென்ஹோங்,

"மார்ச் 31ஆம் நாள், இலங்கைக்கு சீனா இலவசமாக வழங்கிய சைனொபார்மின் 6 இலட்சம் தடுப்பூசிகளை நாம் இங்கே கூட்டாக வரவேற்றோம். இன்று, சீனாவிலிருந்து வந்த மேலும் 5 இலட்சம் தடுப்பூசியின் வருகையை மீண்டும் வரவேற்கிறோம். இந்தத் தடுப்பூசி தற்போது இலங்கையின் வைரஸ் தடுப்புப் பணிக்கு முக்கிய பங்கு ஆற்றும் என்று நம்புகிறேன்.

கொரோனா வைரஸ் பரவல், முழு மனிதகுலத்தின் பொது எதிரியாகும். மனிதகுல சுகாதார பொது எதிர்கால சமூகத்தை உருவாக்குவது, எமது பொது இலக்காகும். ஒற்றுமையுடன் ஒன்றுக்கு ஒன்று உதவி அளிப்பது, வைரஸ் தடுப்பிலான மிக வலிமையான ஆயுதமாகும்.

தடுப்பூசி பகிர்வு, எமது சிறந்த தடுப்பு வழிமுறையாகும். சீனா வளரும் நாடுகளுக்கு 200 கோடி அமெரிக்க டாலரையும் 80க்கும் அதிகமான நாடுகளுக்கு தடுப்பூசி உதவியையும் வழங்கியுள்ளது என்றும், அடுத்த 3 ஆண்டுகளுக்குள் மேலும் 300 கோடி டாலர் சர்வதேச உதவியை வழங்கும் என்றும் மே 21ஆம் நாள், சீன அரசுத் தலைவர் உலக உடல்நல உச்சி மாநாட்டில் அறிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், உலக நாடுகளுக்கு மேலதிக தடுப்பூசிகளை இயன்ற அளவில் வினியோகித்து, சீன தொழில் நிறுவனங்கள், வளரும் நாடுகளுக்குத் தொழில் நுட்பங்களை சீனா விநியோகிக்கும். மேலும், பரிமாற்றம் செய்து இலங்கை உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளுடன், ஒத்துழைப்பு மேற்கொள்வதற்கு ஆதரவளிக்கிறது என்றும் கூறினார்.

ஏப்ரல் 27ஆம் நாள், சீன அரசவையின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யி, இலங்கை வெளியுறவு அமைச்சர் குணவர்தனே உள்ளிட்ட 6 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் கூட்டம் ஒன்றை நடத்தினார்.

கொரோனா வைரஸ் பரவலைக் கூட்டாகச் சமாளிப்பது, பொருளாதார மீட்சி முதலியவை பற்றி சில முக்கிய பொது கருத்துகளையும் சாதனைகளையும் எட்டியுள்ளனர். இன்றைய தடுப்பூசியின் வருகை, இவற்றில் அடங்குகின்றது.

வைரஸ் பரவல் ஏற்பட்டது முதல், சீனாவும் இலங்கையும் ஒன்றுக்கு ஒன்று ஆதரவளித்து, உதவி செய்து வருகின்றன. இரு நாட்டு நட்புறவு மேலும் வளர்ந்துள்ளது. இலங்கையின் சிறந்த அண்டை நாடாகவும், நண்பராகவும், கூட்டாளியாகவும் சீனா உள்ளது.

கடந்த காலம், நிகழ்காலம் அல்லது எதிர்காலம் என எக்காலத்திலும் இலங்கைக்கும் இலங்கை மக்களுக்கும் நன்மை தரும் விஷயங்களிலும் சீனா ஈடுபடுவது உறுதி. இதை வாய்ப்பாகக் கொண்டு, இலங்கையிலுள்ள சீனத் தூதரகத்தின் சார்பில், இரு நாட்டு நட்புறவுக்குப் பங்காற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். இலங்கை மக்கள் வெகுவிரைவில் வைரஸ் தடுப்பில் வெற்றிபெற விரும்புகிறேன்" என்றார்.