'வன்முறையற்ற தொடர்பாடல்' எனும் தலைப்பில் ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு

'வன்முறையற்ற தொடர்பாடல்' எனும் தலைப்பில்  ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு

வன்முறையற்ற தொடர்பாடலை ஊக்குவிக்கும் நோக்கில் ஊடகவியலாளர்களுக்கான இணைய வழி செயலமர்வொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) இடம்பெற்றது.

'வன்முறையற்ற தொடர்பாடலை மற்றும் ஊடகம்' எனும் தலைப்பிலான இந்த செயலமர்வினை ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ, சமூக விஞ்ஞான மற்றும் மானிடவியல் பீடம் ஏற்பாடு செய்திருந்தது.

முதற் தடவையாக தமிழில் இடம்பெற்ற இந்த செயலமர்வு கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் நான்காவது தொகுதியினருக்கானதாகும்.

இந்த நிகழ்வின் வளவாளர்களாக 'வன்முறை சாரா தொடர்பாடல்' எனும் தலைப்பில் வன்முறையற்ற தொடர்பாடலில் சான்றளிக்கப்பட்ட பயிற்சியாளரான ரமானுஷா பூபாலரத்னமும், 'ஊடகத்தின் பொறுப்பான பயன்பாடு' எனும் தலைப்பில் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ். சதீஸ் மோகன் ஆகியோர் பங்குபற்றினர்.

சுமார் 50 ஊடகவியலாளர்கள் இந்த இணைய வழி செயமர்வில் கலந்துகொண்டனர்.

இது போன்ற தமிழ் மொழி மூலமான தொடர் செயலமர்வுகளை எதிர்வரும் செப்டம்பர் 16 மற்றும் 26, ஒக்டோபர் 1 மற்றும் 2 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.