பெண்களுக்கான சமாதான ஊடகவியல் பயிற்சிநெறி

பெண்களுக்கான சமாதான ஊடகவியல் பயிற்சிநெறி

முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியால் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட  பத்து பெண் ஊடகவியலாளர்கள், ஊடகத்துறை மாணவிகளுக்கான சமாதான ஊடகவியல் தொடர்பான ஒன்லைன் செயலமர்வு எதிர்வரும் சனி (14) மற்றும் ஞாயிறு (15) ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது.

இந்த செயலமர்விற்கான பாடத்திட்டம் ஊடகவியலாளர் எம்.ஜே. பிஸ்ரின் முஹம்மத் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் அவரினாலேயே இந்த செயலமர்வும் நடத்தப்படவுள்ளது.

இந்த செயலமர்வின் ஊடாக பன்மைத்துவம்,முரண்பாடுகள் கையாளுகை, சமாதான அடிப்படைகள், சமாதான எண்ணக்கருக்கள், பெண்களும் சமாதான ஊடகவியலும் போன்ற பல தலைப்புகள் பயிற்றுவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.