முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்காவினால் கிண்ணியா வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு

முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்காவினால் கிண்ணியா வைத்தியசாலைக்கு  மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு

கிண்ணியா ஆதார வைத்தியசாலையின் கொவிட் 19 விசேட சிகிச்சைப் பிரிவிற்கு 16 இலட்சம் ரூபா பெறுமதியான அவசர சிகிச்சை உபகரணங்கள் முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்காவினால் இன்று (9) வியாழக்கிழமை அன்பளிப்பு செய்யப்பட்டன. 

முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்காவின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் அப்துலினால் இந்த பொருட்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

திருகோணமலை மாவட்டத்தில் சனத்தொகை அதிகமாக உள்ள பிரதேசமாக கிண்ணியாக அமைவதுடன் அண்மையில் அதிகமான மக்கள் கொவிட் தாக்கத்திற்குள்ள உள்ளானார்கள்.

மேலும், கிண்ணியாவிற்கு அண்மைய கிராமங்கங்களான மூதூர், தம்பலகமம், முள்ளிப்பொதான ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த கொவிட் தொற்று நோயாளர்களுக்கும் இங்கு அவசர சிகிச்சை அளிக்கப்படுகின்றது.

கொவிட் சிகிச்சைக்கென விரிவாக்கப்பட்டுள்ள புதிய பிரிவிற்கு பல்வேறு வைத்திய உபகரணங்கள் அவசரமாக தேவைப்பட்ட நிலையில், வைத்தியசாலை நிர்வாகத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கையினை அடுத்து முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்கா முன்னின்று இம்மருத்துவ உபகரணங்களைப் பெற்றுக்கொடுத்துள்ளது. 

கொவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து அவர்களின் உயிர்களைப் பாதுகாக்க உதவும் வகையில் மீண்டும் இம்மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஓட்சிசன் வழங்கும் உயர்ர உபகரணம், பல்டிபாரா மொனிடர் மற்றும் 10 பல்ஸ் ஒட்சிமீட்டர் என்பன இந்த உபகரணத் தொகுதியில் அடங்கும்

தோற்று நோய் பரவலைத் தடுத்;தல் மற்றும் சிகிச்சையளித்தலுக்கு உதவுதல் ஆகிய மனிதநேய பணிகளின் ஒரு பகுதியாக முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்கா இலங்கை முழுவதும் கொவிட் -19 நோய்த்தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றது.