எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை;விலை அதிகரிப்பும் இல்லை: கம்மன்பில

எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை;விலை அதிகரிப்பும் இல்லை: கம்மன்பில

நாட்டில் எரிபொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ள விடயதானத்துக்குப் பொறுப்பான அமைச்சர் உதய கம்மன்பில, எரிபொருள் விலையை அதிகரிக்கும் எதிர்பார்ப்பும் இல்லையெனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, லங்கா ஐ.ஓ.சி (IOC) நிறுவனம் எரிபொருள் விலையை நேற்று முன்தினம் (21) நள்ளிரவு அதிகரித்துள்ளது. எரிபொருள் விலை தொடர்பில் நேற்று (22) பிற்பகல் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதன்போது, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்தார்.

92 ரக பெட்ரோல் ஒரு லீற்றரின் விலையை 5 ரூபாவாலும், ஓட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலையை 5 ரூபாவாலும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் நேற்று முன்தினம் (21) நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது.

எவ்வாறாயினும், மற்றைய எரிபொருள்களின் விலைகளில் எந்தவொரு மாற்றமும் இடம்பெறவில்லை என ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.