கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் இடமாற்றம்

கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் இடமாற்றம்

கிழக்கு மாகாணத்திலுள்ள அமைச்சுக்களின் செயலாளர்கள் மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் இடமாற்றப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான அறிவிப்பு கிழக்கு மாகாண ஆளுநரினால் இன்று (01) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய, கிழக்கு மாகாண அமைச்சுகளின் புதிய செயலாளர்களின் பெயர் விபரம்:
1.    கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் – திருமதி பீ. கலாமதி
2.    கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் – திருமதி ஜே.ஜே. முரளிதரன்
3.    கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் – ஏ.எச்.எம்.அன்சார்
4.    கிழக்கு மாகாண விவசாய  அமைச்சின் செயலாளர் – ஐ.கே.ஜே. முத்துபண்டா
5. கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் – எச்.ஈ.எம்.டப்ளியூ.ஜீ. திசாநாயக்க
6. கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் – எம்.கோபலரத்னம்
7.    கிழக்கு மாகாண சபை செயலகத்தின் செயலாளர் – எம்.வை. சலீம்