கல்முனை பிராந்திய வைத்தியசாலைகளின் சேவைகள் தொடர்பில் ஒன்லைன் மூலம் தெரிவிக்க நடடிக்கை

கல்முனை பிராந்திய வைத்தியசாலைகளின் சேவைகள்  தொடர்பில் ஒன்லைன் மூலம் தெரிவிக்க நடடிக்கை

எம்.என்.எம்.அப்ராஸ், நூருள் ஹுதா உமர்

 

கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை  பிரிவில் உள்ள வைத்தியசாலைகள், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களில் தேவையான சுகாதார  வசதிகள் ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது மக்களுக்கும் எப்போதும் சிறந்த சேவையினை வழங்குவதே எமது நோக்கமாகும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பணிப்பாளர் வைத்தியர் ஐ.எல்.எம்.றிபாஸ் தெரிவித்தார் .

கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை பிரிவில் சுகாதார சேவைகள் தொடர்பில் மேற்க்கொள்ளப்படும் விடயங்கள் மற்றும் எதிர்கால திட்டமிடல்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு கல்முனை பிராந்திய சுகாதாரசேவைகள் பணிமனையில் நேற்று (26) இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

"கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை பிரிவில் சிறந்த நிர்வாக கட்டமைப்பு காணப்படுகிறது. எமது பிரிவில் உள்ள சகல வைத்தியசாலைகளிலும் தேவையான வசதிகள் ஏற்ப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் அரச வைத்தியசாலைகளை பயன்படுத்த வேண்டுமெனவும் மேலும் எமது கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை பிரிவில் பொது மக்களுக்கு சுகாதார சேவைகள் தொடர்பில் குறைபாடுகள் காணப்படின்  எமக்கு நேரடியாக அறிவிக்க முடியும் அல்லது மேலும் இதற்கென புதிதாக ஒன்லைன் QR கோட் முறையினை எற்ப்படுத்தி உள்ளோம்.

இதனை வைத்தியசாலைகள்,சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களில் QR scan stickers ஒட்டப்பட்டுள்ளது.இதனை smart phone மூலம் scan செய்வதன் மூலம் சுகாதார சேவைகள் தொடர்பான விடயங்களை எமக்கு அறிவிக்க முடியும் என கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை பணிப்பாளர் வைத்தியர் ஐ.எல்.எம்.றிபாஸ் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் .

மேலும் ஏதும் குறைபாடுகள் காணப்படின் இதன் மூலம் உடனடியாக நடவடிக்கைகள் எற்ப்படுத்த முடியும் நிலை உள்ளது அல்லது எமது சேவைகள் திருப்திகரமானதாக உள்ளதா? இல்லையா? என்பதை அவதானிக்க முடியும் மக்கள் சிறந்த முன்னோடி மிக்க சுகாதார சேவையினை பெற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

இதனால் பொது மக்கள் மத்தியில் சுகாதார சேவைகள்  நம்பிக்கைமிக்கதாக கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை பிரிவில் பேசப்படும் நிலை இன்று உள்ளது

இவையெல்லாம் எமது பிராந்தியத்தில் உள்ள சுகாதார சேவை  ஊழியர்களை கண்டிப்பத்ற்கு அல்ல,இன்றுள்ள சூழலில் பொது மக்கள் அரச வைத்தியத் துறை சேவையினை பூரணமாக பயன்படுத்தினால் அவர்களின் பொருளாதார சுமையை பெருமட்டில் குறைக்க முடியும்.

ஒரு குழந்தைக்கு வைத்திய செலவுக்காய் சாதாரணமாக (போக்குவரத்து உட்பட) சுமார் 3,000 ரூபாய் வரைசெலவு செய்வதாக தெரிய வருகின்றது. ஆனால் எமது கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை  பிரிவில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் குழந்தைகளுக்கான மருந்து வகைகள் தற்போது கையிருப்பில் காணப்படுகின்றது.

மேலும் நான் கடமைகளை பொறுப்பேற்ற பின்னர்   கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை பிரிவில் சுகாதர சேவைகள் தொடர்பில் களஆய்வு  மேற்கொள்ளப்பட்டு முறையான திட்டமிடல்கள் செய்யப்பட்டு வைத்தியசாலைகளுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் மக்களுக்கும் சுகாதார சேவைகள் சிறந்த முறையில் கிடைக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். எமது  பிராந்திய பிரிவில் சுகாதர சேவைகளை பெற்றுக் கொள்ள கிராமத்தில் உள்ள மக்களுக்கு போக்குவரத்து செய்வதில் மிகவும் சிரமமான நிலை காணப்பட்டதுடன் அதிகமான பணம் செலவு செய்துகொள்ள வேண்டிய நிலை காணப்பட்டது.

இந்நிலையில் இவற்றினை நிவர்த்தி செய்யும் வகையில் வைத்திய சேவைகளை மக்களின் காலடிக்கு கொண்டு சென்று உள்ளோம் பொதுமக்கள் அரச வைத்தியசாலைகளில் சேவைகளை பூரணமாக பெறவேண்டும் என்பதே எமது நோக்கமாகும்" என்றார்.

மேலும் இவ் ஊடக சந்திப்பில் கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை திட்டமிடல் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி மாஹிரும் கலந்து கொண்டார் .