ஞானசார தேரர் சவூதி அரேபியா விஜயம்

ஞானசார தேரர் சவூதி அரேபியா விஜயம்

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு சவூதி அரேபியா சென்றுள்ளார்.

சவூதியின் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மானின் அழைப்பினை ஏற்றே ஞானசார தேரர் அங்கு சென்றுள்ளார். இலங்கையிலுள்ள அடிப்படைவாதம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே அவர் சவூதி அரேபியா அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சவூதி அரேபியாவினை ஞானசார தேரர் கடுமையாக விமர்சனம் செய்து வந்த நிலையிலேயே அவர் அங்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-டெய்லிமிரர்-