பருப்பு, டின் மீனுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்

பருப்பு, டின் மீனுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்

பருப்பு மற்றும் டின் மீன் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த  கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்தது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நுகர்வோர் அதிகார சபையினால் கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஒரு கிலோ பருப்புக்கு 65 ரூபாவும் 425 கிராம் டின் மீனிற்கு 100 ரூபாவும் கட்டுப்பாட்டு விலை கடந்த மார்ச் 17ஆம் திகதி விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.