பொலிஸ் அத்தியட்சகர் நவாஸிற்கு எதிராக அமைச்சர் ஆறுமுகன் முறைப்பாடு

பொலிஸ் அத்தியட்சகர் நவாஸிற்கு எதிராக அமைச்சர் ஆறுமுகன் முறைப்பாடு

பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஏ.எம்.நவாஸிற்கு எதிராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானினால் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.

சூரியன் எப்.எம் வானொலியில் ஒலிபரப்பாகும் விழுதுகள் நிகழ்ச்சியில் பொலிஸ் அத்தியட்சகர் நவாஸ்  வெளிப்படுத்திய கருத்து ஒன்று தொடர்பாக, அமைச்சரினால் இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு கடந்த மே 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமனரத்னவிடம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.