ஏழு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

ஏழு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

ஏழு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (11) திங்கட்கிழமை நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்தது. 

இதில் சுகாதார சுதேச சேவைகள் அமைச்சு மற்றும் மகாவலி, விவசாய அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்களாக மேஜர் ஜெனரல்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய ஐந்து பேரும் முன்னர் அமைச்சின் செயலாளர்களாக கடமையாற்றியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு அமைச்சு மட்டத்தில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.